ஒரு கப் அவல் மற்றும் நான்கு வாழைப்பழம் இருந்தா போதும்… ஆரோக்கியமான, ருசியான சிற்றுண்டி ரெடி!!!

21 September 2020, 9:54 pm
Quick Share

கேரளா மாநிலங்களில் சிற்றுண்டியாக சாப்பிடப்படும் ஒரு முற்றிலும் வித்தியாசமான ரெசிபியை தான் பார்க்க போகிறோம். நமக்கு இது சிற்றுண்டியாக ஒத்து வராவிட்டாலும் மாலை நேரத்தில் ஒரு ஸ்னாக்ஸ் போல எடுத்து கொள்ளலாம். இதனை செய்வது மிகவும் எளிது. ஐந்தே நிமிடத்தில் செய்து முடித்து விடலாம். 

தேவையான பொருட்கள்:

அவல்- 1 கப்

நாட்டு சர்க்கரை- 3 தேக்கரண்டி

பழுத்த வாழைப்பழம்- 4

வேர்க்கடலை- 1/2 கப்

பால்- 1 கப்

செய்முறை:

அவல் பால் செய்வதற்கு முதலில் ஒரு கிண்ணத்தில் நன்கு பழுத்த நான்கு வாழைப்பழங்களை தோல் உரித்து எடுத்து கொள்ளலாம். அதனை ஒரு கரண்டி கொண்டு நன்றாக மசித்து கொள்ளவும். பிறகு இனிப்பு சுவைக்காக மூன்று தேக்கரண்டி நாட்டு சர்க்கரை சேர்த்து கிளறவும். இனிப்பிற்கு நீங்கள் தேன், பனங்கற்கண்டு அல்லது வெள்ளை சர்க்கரை கூட சேர்க்கலாம். 

இப்போது ஒரு பெரிய பாட்டில் எடுத்து அதில் நாம் மசித்து வைத்த வாழைப்பழ கலவையை கொஞ்சம் வையுங்கள். அதன் மீது சிறிதளவு லேசான அவல் தூவவும். பிறகு சிறிதளவு பால் ஊற்றி கொள்ளலாம். அடுத்த லேயரில் உங்களுக்கு விருப்பமான நட்ஸ் வகைகள் எவையேனும் சேர்த்து கொள்ளலாம். 

இதே போல மீண்டும் சிறிதளவு வாழைப்பழ கலவை, லேசான அவல், பால் மற்றும் நட்ஸ் சேர்த்து கொள்ளுங்கள். கடைசியில் மேலே சிறிதளவு அவல் தூவி கோகோ பவுடர் இருந்தால் அதனையும் சேர்த்து கொள்ளலாம். அவ்வளவு தான்… நமது அவல் பால் தயார். இதனை சாப்பிடும் போது பெரிய ஸ்பூன் ஒன்றினால் வாழைப்பழத்தோடு சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். 

Views: - 1

0

0