அரிசி மாவு இல்லாமல் ருசியான அதே சமயம் ஆரோக்கியமான ஒரு இன்ஸ்டன்ட் தோசை!!!

24 November 2020, 11:45 am
Quick Share

என்ன சமைப்பது என டிசைட்  பண்ணுவதே பெண்களுக்கு ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கும். அதுவும் காலை உணவு என்பது செய்வதற்கு ஈசியாகவும் இருக்கணும், அதே சமயம்  ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். அப்படி ஒரு ரெசிபியை தான் இன்று நாம் பார்க்க போகிறோம். அரிசி மாவு இல்லாத சமயத்தில் தினை வகைகளில் ஒன்றான சாமையை கொண்டு இந்த தோசையை செய்யலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த உணவு. இதனை குழந்தைகளுக்கும் எந்த வித பயமும் இல்லாமல் கொடுக்கலாம். இப்போது இந்த தோசையை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

சாமை- ஒரு கப் 

தேங்காய்- ஒரு கப்

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

*இந்த தோசையை காலை  சிற்றுண்டியாக செய்ய நீங்கள் விரும்பினால் இரவே சாமையை ஊற வைத்து விட வேண்டும். 

*அடுத்த நாள் காலையில் ஊற வைத்த சாமையை கழுவி சுத்தம் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும். 

*அரைக்கும் போது ஒரு கப் தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். 

*அரைத்த பிறகு மாவை தோசை பதத்திற்கு தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும். 

*ஒரு வேலை இட்லி சுட வேண்டும் என்று ஆசைப்பட்டால் தண்ணீரை அதற்கு தகுந்தாற்போல் ஊற்றி கொள்ளுங்கள். 

*தோசை மாவு இப்போது தயாராக உள்ளது. ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசையை சுட வேண்டியது தான். 

*இந்த தோசைக்கு வேர்க்கடலை சட்னி மற்றும் கெட்டி சட்னி அசத்தலான காம்பினேஷனாக இருக்கும்.

Views: - 2

0

0