இரண்டே நிமிடத்தில் தயாராகும் சத்தான, சுவையான, ஈசியான காலை உணவு ரெசிபி!!!
4 April 2021, 8:23 pmகாலை உணவு என்பது சந்தேகத்திற்கு இடமின்றி அன்றைய மிக முக்கியமான உணவுகளில் ஒன்றாகும். மேலும் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க காலையில் ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை உட்கொள்வது அவசியம். இருப்பினும், வேலையைத் தொடங்குவதற்கான நம் அவசரத்தில், நம்மில் நிறைய பேருக்கு ஒரு ஆரோக்கியமான காலை உணவை செய்வதற்கு நேரம் கிடைப்பதில்லை என்பதும் உண்மை. எனவே இந்த பதிவில் ஈசியான அதே சமயம் ஆரோக்கியமான மற்றும் திருப்திகரமான ஒரு காலை உணவு ரெசிபியை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* 1/2 கப் ஓட்ஸ்
* 1/2 கப் பால்
* 1 தேக்கரண்டி கொக்கோ பவுடர்
* 1/2 கப் சூடான எஸ்பிரெசோ காபி (espresso)
* 2-3 நறுக்கிய அக்ரூட் பருப்புகள்
* 1/2 தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள்
* 1/2 வாழைப்பழம்,
செய்முறை:
* ஒரு பாத்திரத்தில் சரியான அளவு ஓட்ஸ் எடுக்கவும்.
* மற்றொரு பாத்திரத்தில் பால், கொக்கோ பவுடர் மற்றும் எஸ்பிரெசோ காபி ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். (எஸ்பிரெசோ என்பது சாக்லேட் காபி)
* இந்த கலவையை ஓட்ஸூடன் சேர்க்கவும்.
*வாழைப்பழம், அக்ரூட் பருப்புகள் மற்றும் இலவங்கப்பட்டை தூள் ஆகியவற்றை கொண்டு அலங்கரிக்கவும்.
* ஒரு இரவு முழுவதும் ஃபிரிட்ஜில் வைக்கவும்.
*குறைந்தபட்சம் எட்டு மணி நேரம் குளிர்ச்சியாக இருக்கட்டும். இதனை 24 மணி நேரத்திற்குள் சாப்பிடுவது சிறந்தது.
*முந்தைய நாள் இரவே தயாரித்து வைத்து விட்டால் காலையில் சாப்பிடுவதற்கு எளிதாக இருக்கும்.
0
0