சட்டென்று தயாராகும் அனைத்து உணவுகளுக்கும் ஏற்ற ஸ்பெஷலான சாஸ் ரெசிபி!!!

31 March 2021, 1:20 pm
Quick Share

பலருக்கு குறைந்த பொருட்களில் சிறந்த ருசியில் உணவுகளை சமைப்பது மிகவும் பிடிக்கும். அந்த வகையில் நம் அன்றாட உணவுகள் பலவற்றில் நாம் பயன்படுத்துவது சாஸ். சாதம் முதல் பீட்ஸா மற்றும் பர்கர்கள் வரை நாம் சாப்பிடும் எல்லா உணவிற்கும் சாஸ் போட்டு சாப்பிடுவோம். இன்று எல்லா உணவுகளுக்கும் ஏற்ற ஒரு ஸ்பெஷலான சாஸ் ரெசிபி எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:
மிளகு தூள்
கொத்தமல்லி தூள்
சீரகம் தூள்
கொத்தமல்லி தழை
வோக்கோசு
பூண்டு
எலுமிச்சை சாறு
உப்பு
ஆலிவ் எண்ணெய்
பச்சை மிளகாய்

செய்முறை:

  • மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மசாலா பொருட்களையும் ஒரு கடாயில் சேர்த்து ஒரு நிமிடம் மட்டும் வறுக்கவும்.

*எண்ணெய் எதுவும் ஊற்றாமல் டிரை ரோஸ்ட் செய்யுங்கள்.

  • இதனை ஒரு ஃபுட் பிராசஸரில் சேர்க்கவும்.
  • அடுத்து இதனோடு கொத்தமல்லி தழை, வோக்கோசு, பூண்டு, எலுமிச்சை சாறு, உப்பு, ஆலிவ் எண்ணெய் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
  • பொருட்கள் அனைத்தும் நன்றாக சேரும்படி கலக்கவும்.

*அவ்வளவு தான்… சுவையான, ஆரோக்கியமான சாஸ் தயாராக உள்ளது.

Views: - 0

0

0