மழைக்கு ஏற்ற சோளம், பன்னீர் சமோசா சுட சுட செய்து சாப்பிடலாம்!!!

4 September 2020, 10:29 am
Quick Share

பருவமழை நேரத்தில் ஒரு சூடான கப் காபியுடன் ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிடுவது யாருக்கு தான் பிடிக்காது…. ஒரு மழை நாளில் அனுபவிக்கக்கூடிய பல சமையல் வகைகள் இருந்தாலும், மொறு மொறு  சமோசாவை விட சிறந்தது எதுவுமில்லை. அதிலும் நமக்கு பிடித்த சோளம் மற்றும் பன்னீருடன் உங்கள் மாலை நேரத்தை இன்னும் கொஞ்சம் சிறப்பாக்க விரும்பினால், நீங்கள் முயற்சிக்க விரும்பும் ஒரு சமோசா செய்முறை இங்கே உள்ளது.

தேவையான பொருட்கள்:

½ கப் – இனிப்பு சோளம், (வேகவைத்தது)

½ கப் – அரைத்த பன்னீர்

1 – வெங்காயம் (நறுக்கியது)

2 – பச்சை மிளகாய் (நறுக்கியது)

1 – சிறிய குடைமிளகாய் (நறுக்கியது)

2 தேக்கரண்டி – நறுக்கிய கொத்தமல்லி இலைகள்

சுவைக்க உப்பு

½ கப் – அரைத்த பதப்படுத்தப்பட்ட சீஸ்

2 தேக்கரண்டி – சிவப்பு மிளகாய் செதில்களாக (சில்லி ஃபிளேக்ஸ்) 

மைதா மாவு 

பொரிக்க தேவையான அளவு எண்ணெய்

செய்முறை:

* ஒரு பாத்திரத்தில், அனைத்து பொருட்களையும் சேர்த்து ஒன்றாக கலக்கவும். பின்னர் உப்பு மற்றும் சிவப்பு மிளகாய் செதில்களை  சேர்த்து கலக்கவும். சமோசாவிற்கு தேவையான பூரணம் தயாராக உள்ளது. 

* மாவில் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

* மாவை முடிந்த வரை மெலிசாக விரித்து ஒரங்களை வெட்டி எடுத்து விடுங்கள். 

* அதன் பிறகு அதனை செவ்வக வடிவங்களில் வெட்டி ஒவ்வொன்றாக தோசைக் கல்லில் போட்டு எடுத்து கொள்ளலாம். 

ஒரு வினாடி மட்டும் போட்டு எடுத்தால் போது. 

* இப்போது ஒரு பவுலில் இரண்டு தேக்கரண்டி மைதா மாவை தண்ணீர் ஊற்றி பேஸ்டாக கலந்து வைத்து கொள்ளுங்கள்.

* ஒவ்வொரு ஷீட்டாக எடுத்து முதலில் ஒரு ஓரத்தில் மட்டும் மைதா பேஸ்டை தடவி அதனை கோன் போல உருட்டி பூரணத்தை உள்ளே வைத்து பிறகு மைதா பேஸ்ட் கொண்டு ஓரங்களை ஒட்டி விடுங்கள். இவ்வாறு அனைத்து ஷீட்டையும் தயாராக வைத்து கொள்ளலாம்.

* தயார் செய்து வைத்த சமோசாவை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். 

* சட்னியுடன் சூடான சமோசாக்களை அனுபவிக்கவும்.

Views: - 6

0

0