இப்படி ஒரு முறை சிக்கன் சூப் வைத்து பாருங்களேன்!!!

6 April 2021, 7:00 pm
Quick Share

நம் உடல் ஆரோக்கியத்திற்கு சூப் மிகவும் நல்லது. அதிலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சூப் ஒரு நல்ல உணவு. அடிக்கடி உங்கள் உணவில் சூப் சேர்த்து வந்தால் நீங்கள் நினைத்ததை விட மிக விரைவாக உடல் எடையை குறைத்து விடலாம். குறிப்பாக சிக்கன் சூப் நல்ல பலனை தரக்கூடியது. இது ருசி மிகுந்ததாக இருப்பதோடு ஆரோக்கியமானதாகவும் அமைகிறது. இதற்காக தினமும் கடைகளில் சூப் வாங்கி குடிக்க முடியாது. அதனை சுலபமாக வீட்டிலே எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்: 

சிக்கன் – 300 கிராம் 

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை  தண்ணீர் – 2 கப் 

அரைக்க:

சின்ன வெங்காயம் – 10 

கொத்தமல்லி – 1/4 கப்  சீரகம் – 1 கரண்டி

மிளகு – 1/2 கரண்டி

தாளிக்க: 

எண்ணெய் – 1 1/2 கரண்டி 

ஏலக்காய் – 1 

சீரகம் – 1/2 கரண்டி கறிவேறிப்பிலை – ஒரு கொத்து 

பெரிய வெங்காயம் – 1 சின்ன வெங்காயம் 

செய்முறை: 

*கடையில் இருந்து வாங்கி வந்த சிக்கன் துண்டுகளை முதலில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவ வேண்டும்.

*ஒரு மிக்ஸி ஜாரில் அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து பேஸ்டாக அரைக்கவும்.

*இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.

*எண்ணெய் காய்ந்ததும் அதில் சீரகம் மற்றும் ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.

*அடுத்து வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

*வெங்காயம் பொன்னிறமாக வறுப்பட்டதும் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.

*பின்னர் அரைத்த மசாலா கலவையை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

*இதனோடு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடி ஐந்து விசில் வர விடவும்.

*அவ்வளவு தான்… ருசியான சிக்கன் சூப் தயார்.

Views: - 0

0

0

Leave a Reply