கஷ்டமே இல்லாமல் உடனடியாக தயாராகும் சைனீஸ் ஸ்டைல் ஸ்வீட் சிக்கன்!!!

2 April 2021, 8:29 pm
Quick Share

சீன உணவு உலகம் முழுவதும் பிரபலமான ஒன்று. இது இனிப்பு, புளிப்பு மற்றும் காரமான சுவைக்கு பிரபலமானது.  சீன உணவு அதன் பெரும்பாலான உணவுகளில் சில பிரதான பொருட்களைப் பயன்படுத்துகிறது. இதில் வினிகர், சோயா சாஸ், ஹொய்சின் சாஸ், பூண்டு மற்றும் மிளகாய் பெரும்பாலும் இருக்கும்.

அத்தகைய ஒரு சீன உணவான இனிப்பு மற்றும் புளிப்பு சிக்கன் ரெசிபி எப்படி செய்வது என இந்த பதிவில் பார்ப்போம். இதனை மிக விரைவாகவும், எளிமையாகவும் செய்து விடலாம். 

செய்முறை: 

*ஒரு கிண்ணத்தில் 500 கிராம் எலும்பு இல்லாத சிக்கன் துண்டுகளை எடுத்து கொள்ளவும். அதனோடு ½ கப் சோள மாவு, 2 முட்டை வெள்ளை கரு மற்றும் ¼ தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து வையுங்கள். சிக்கன் மசாலாவோடு சேருமாறு  நன்கு கலக்கவும். இந்த கலவையை 15-20 நிமிடங்கள் ஊற வைக்கலாம்.

*சாஸ் தயாரிக்க, ½ கப் வெள்ளை சர்க்கரை, 1/4 கப் பிரவுன்  சர்க்கரை, ½ கப் ஆப்பிள் சைடர் வினிகர், 2 பல் பூண்டு, 3 தேக்கரண்டி சோயா சாஸ் மற்றும் ¼ கப் தக்காளி கெட்ச்அப் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும்.

*ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிது எண்ணெயை சூடாக்கவும். பிறகு நாம் ஊற வைத்துள்ள சிக்கன்  துண்டுகளை மட்டும் சேர்க்கவும். இரண்டு பக்கத்திலும் பொன்னிறமாக மாறும் வரை 1 நிமிடம் வறுக்கவும். பிறகு சிக்கன் துண்டுகளை ஆற  வைக்கவும். 

*இப்போது சிக்கன் வறுத்தெடுத்த அதே கடாயில் 1 தேக்கரண்டி இஞ்சி விழுது, 1 நறுக்கிய சிவப்பு குடை மிளகாய், 1 நறுக்கிய மஞ்சள் குடை மிளகாய், 1 நறுக்கிய  வெங்காயம், 1 கப் அன்னாசி துண்டுகளை  போட்டு ஒரு நிமிடம்  வதக்கவும்.

*அடுத்து இதில் நாம்  தயார் செய்து வைத்த  சாஸை சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு ஆற வைத்த சிக்கன் துண்டுகளையும் சேர்த்து   ஒரு நிமிடம் சமைக்கவும். நன்கு கலந்து சூடாக பரிமாறவும்.

Views: - 1

0

0