சாக்லேட் பாப்கார்ன்: இன்றைய ஐபிஎல் போட்டிக்கு நொறுக்கு தீனி தயார்!!!

By: Udayaraman
13 October 2020, 11:29 pm
Quick Share

பாப்கார்ன் என்றாலே நமக்கு பிடிக்கும். அதிலும் சாக்லேட் பாப்கார்ன் என்றால் சொல்லவா வேண்டும். இன்றைய ஐபிஎல் போட்டியை கண்டு மகிழ என்ன ஸ்னாக்ஸ் செய்யலாம் என நீங்கள் யோசித்து கொண்டு இருந்தால் உங்களுக்காக ஒரு ருசியான மொறு மொறு சாக்லேட் பாப்கார்ன் ரெசிபி இங்கு உள்ளது.  

தேவையான பொருட்கள்:

சோள விதைகள்

பழுப்பு சர்க்கரை

வெண்ணெய்

எண்ணெய்

நறுக்கிய சாக்லேட்

செய்முறை:

* ஒரு கடாயை சூடாக்கி, சிறிது வெண்ணெய், சிறிது எண்ணெய் மற்றும் பழுப்பு சர்க்கரை சேர்க்கவும்.

* இப்போது சோளத்தை சேர்த்து நன்கு கலக்கவும்.

* ஒரு மூடியுடன் கடாயை மூடி, சோளம் முழுவதுமாக வெடிக்கும் வரை காத்திருக்கவும்.  

* வெடிக்கும் சத்தம் அடங்கியதும், பாப்கார்ன் சூடாக இருக்கும்போது சிறிது நறுக்கிய சாக்லேட் சேர்த்து கொள்ளுங்கள். அவ்வளவு தான்… உங்கள் சாக்லேட் பாப்கார்ன் தயாராக உள்ளது.

Views: - 51

0

0