இத விட சுலபமா யம்மியான மட்டன் பிரியாணி செய்யவே முடியாது!!!

30 March 2021, 1:40 pm
Mutton Biriyani -Updatenews360
Quick Share

பிரியாணி பிடிக்காதவர்களே இல்லை சொல்லி விடலாம். தினமும் பிரியாணி கொடுத்தால் கூட ஒரு சிலர் சாப்பிட்டு விடுவார்கள். அதிலும் மட்டன் பிரியாணி சொல்லவே வேண்டாம். ஆனால் என்ன தான் நாம் வீட்டில் பிரியாணி செய்தாலும் கடைகளில் வாங்கி சாப்பிடுவது போல வராது. இன்று வீட்டிலே சுவையான பிரியாணியை எளிதாக எப்படி செய்யலாம் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

செய்முறை:
*5 பல் பூண்டு மற்றும் ஒரு இஞ்சி துண்டை ஒன்றாக அரைத்து மென்மையான பேஸ்ட் தயாரிக்கவும்.

*மட்டனை நன்கு கழுவி, சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, தயிர் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து கலந்து ஊற செய்யவும். இது 20-30 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும்.

*இப்போது ஒரு பிரஷர் குக்கரில், 2 கிராம்பு மற்றும் ஒரு பிரியாணி இலை சேர்க்கவும். அடுத்து நறுக்கிய பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்க்கவும்.

*மேலும் சிறிது உப்பு, 2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள் மற்றும் ஒரு சிட்டிகை கரம் மசாலா போடவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நாம் ஊற வைத்துள்ள மட்டன் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும்.

*ஒரு பாத்திரத்தில், 2 கரண்டி எண்ணெய் ஊற்றி ஒரு கிராம்பு மற்றும் ஒரு பிரியாணி இலை சேர்க்கவும். பின் நறுக்கிய பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2-3 நிமிடம் வதக்கவும்.

*மட்டன் சேர்த்து அது பழுப்பு நிறமாக மாறும் வரை 2 நிமிடம் சமைக்கவும். இதனுடன் 3 தேக்கரண்டி தயிர் சேர்க்கவும். சுவைக்கு ஏற்ப 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், ½ தேக்கரண்டி கரம் மசாலா மற்றும் உப்பு சேர்க்கவும். தொடர்ந்து கிளறி, 2 நிமிடங்கள் குறைந்த தீயில் சமைக்கவும்.

*2 கப் அரிசியைக் கழுவி பாத்திரத்தில் சேர்க்கவும். நன்றாக கலந்து, மட்டன் மற்றும் அதனை சமைத்த தண்ணீரை சேர்க்கவும். குறைந்த தீயில் 10-15 நிமிடங்கள் சமைக்கவும். கடைசியில் சில கொத்தமல்லி இலைகள் மற்றும் வறுத்த வெங்காயத்துடன் அலங்கரித்து சூடாக பரிமாறவும்.

Views: - 2

0

0