ரசித்து ரசித்து சாப்பிட சுவையான காலிஃபிளவர் புட்டிங்!!!

24 April 2021, 10:47 am
Quick Share

காலிஃபிளவர் அங்கு பல்துறை காய்கறி ஆகும்.  எப்போதும் காலிஃபிளவர் வைத்து கோபி மஞ்சூரியன், வெஜிடபிள் பிரியாணி, காலிஃபிளவர் 65 போன்றவற்றை செய்திருப்பீர்கள். ஆனால்  காலிஃபிளவர் வைத்து இனிப்பு செய்ய முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா…? ஆம், இன்று நாம் பார்க்க இருப்பது காலிஃபிளவர் புட்டிங்.  

Aதேவையான பொருட்கள்:

100 கிராம் காலிஃபிளவர் பூக்கள்

10 கிராம் வெண்ணெய்

30 கிராம் கிரீம்

1 தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ் 

1 தேக்கரண்டி சர்க்கரை

செய்முறை: 

* முதலில் காலிஃபிளவரை  வெட்டிக் கொள்ளுங்கள். இது மென்மையாகும் வரை ஐந்து நிமிடங்கள் தண்ணீரில்  வேகவைக்கவும்.

* தண்ணீரை வடிகட்டி, காலிஃபிளவரை ஆற வைக்கவும்.

* ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெயை சேர்க்கவும். அதில் காலிஃபிளவர் கூழ் சேர்க்கவும். தண்ணீர் அனைத்தும் வற்றும் வரை   சமைக்கவும்.

* இப்போது இதில் வெண்ணிலா எசன்ஸ்  சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் கிரீம் சேர்த்து, கலவை கெட்டியாகும் வரை சமைக்கவும்.

* ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

* நீங்கள் இதை ஒரு புட்டிங் வடிவில் சாப்பிடலாம்  அல்லது ஒரு ஐஸ்கிரீமாக ஃப்ரீசரில் வைத்தும் சாப்பிடலாம்.

Views: - 25

0

0

Leave a Reply