முப்பதே நிமிடத்தில் தயாராகும் சுவையான செட்டிநாடு காலிஃபிளவர் சூப்!!!

17 November 2020, 8:33 pm
Quick Share

உணவிற்கு முன்பாக ஒரு சூப் சாப்பிட்டு விட்டு உணவு எடுத்தால் நன்றாக பசி எடுப்பதோடு உணவும் சரியான முறையில் செரிமானம் ஆகும். இன்று நாம் பார்க்க இருப்பது ருசியான காலிஃப்ளவர் சூப். இதனை முப்பதே நிமிடத்தில் அசத்தலாக தயார் செய்து விடலாம். இப்போது காலிஃப்ளவர் சூப் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

*1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் 

*1 வெங்காயம்

*1 பல் பூண்டு 

*1 காலிஃபிளவர் 

*6 கப் கோழி அல்லது வெஜிடபிள் ஸ்டாக்  

*1 பிரியாணி இலை

*தேவையான அளவு உப்பு

*1 தேக்கரண்டி கருப்பு மிளகு 

*1/4 கப் ஃபிரஷ் கிரீம்  

செய்முறை:

*ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றவும். 

*எண்ணெய் மிதமான சூட்டில் வந்தவுடன் நறுக்கிய  வெங்காயம் சேர்த்து ஆறு  நிமிடங்கள் வரை சமைக்கவும். 

*வெங்காயம் வதங்கியதும் பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வரை சமைக்கவும். 

*இப்போது காலிஃபிளவர், வெஜிடபிள் ஸ்டாக் மற்றும் பிரியாணி இலை சேர்த்து ஒரு இளங்கொதிவா வரை கொண்டு வாருங்கள். 

*காலிஃபிளவர் மிகவும் மென்மையாக இருக்கும் வரை சமைக்கவும். இதற்கு  15 முதல் 20 நிமிடங்கள் வரை ஆகும். 

*காய்கறிகள் மென்மையாக ஆன பிறகு பிரியாணி இலைகளை அகற்றி விடவும். 

*பொருட்கள் அனைத்தையும் ஒரு பிளெண்டருக்கு மாற்றி அரைத்து கொள்ளவும். 

*கடைசியில் கிரீம் சேர்த்து  தேவைப்பட்டால் மீண்டும் சூடாக்கவும். ஆலிவ் எண்ணெய் மற்றும் கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரித்து உடனடியாக பரிமாறவும். 

Views: - 18

0

0