இன்றே டிரை பண்ணுங்க…ருசி மிகுந்த செட்டிநாடு வர மிளகாய் சட்னி!!!

2 February 2021, 9:03 pm
Quick Share

செட்டிநாடு சமையலுக்கு தனி சுவை உண்டு. இந்த சமையலை முதல் முறையாக சாப்பிடுபவர்கள் நிச்சயமாக இதற்கு மயங்கி விடுவார்கள். ஏனெனில் செட்டிநாடு சமையல் அவ்வளவு சுவை மிகுந்ததாக இருக்கும். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது காரசாரமான வர மிளகாய் சட்னி. இது இட்லி, தோசை, பனியாரம் ஆகியவற்றிற்கு அருமையான காம்பினேஷன். இப்போது வர மிளகாய் சட்னி எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

அரைக்க:

சின்ன வெங்காயம்- 1/2 கப்

தக்காளி- 1

வர மிளகாய்- 2

காஷ்மீரி மிளகாய்- 2

புளி- ஒரு தேக்கரண்டி

கல் உப்பு- தேவைக்கு ஏற்ப

தாளிக்க:

நல்லெண்ணெய்- ஒரு தேக்கரண்டி

கடுகு- ஒரு தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு- 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை- ஒரு கொத்து

பெருங்காயத் தூள்- ஒரு சிட்டிகை

செய்முறை:

*வர மிளகாய் சட்னி செய்வதற்கு முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், தக்காளி, வர மிளகாய், காஷ்மீரி மிளகாய், புளி மற்றும் கல் உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.

*இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். 

*எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்கவும். 

*அடுத்து நாம் அரைத்து வைத்துள்ள பேஸ்டை சேர்த்து ஒரு மூடி போட்டு மூடவும். 

*இதனை குறைந்த தீயில் பத்து நிமிடங்கள் சமைக்கவும்.

*பத்து நிமிடங்கள் கழித்து வெங்காயம் மற்றும் தக்காளியின் பச்சை வாசனை போய்விட்டதா என சரி பார்க்கவும். பச்சை வாசனை இருந்தால் மேலும் 3 – 4 நிமிடங்கள் சமைக்கவும். 

*அவ்வளவு தான்… ருசியான வர மிளகாய் சட்னி இப்போது தயார்.

Views: - 34

0

0