நான்கே பொருட்கள் கொண்டு ருசியான இனிப்பு பலகாரம்!!!

4 February 2021, 2:00 pm
Quick Share

நாள் முழுவதும் வேலை பார்த்து களைத்து வீட்டிற்கு திரும்பும் உங்களுக்கு ஏதேனும் சாப்பிட வேண்டும் போல இருக்கா… நான்கே  பொருட்கள் கொண்டு ஒரு ருசியான இனிப்பு பலகாரத்தை எப்படி செய்வது என இன்று நாம் பார்க்க போகிறோம். இதனை எளிதாக செய்து விடலாம். இதனை செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது.  

தேவையான பொருட்கள்:  

50 கிராம் – டார்க் சாக்லேட் (70% கொக்கோ),  

50 கிராம் – தேன் 

150 கிராம் – தயிர், 

3 – முட்டை வெள்ளைக்கரு   

செய்முறை: 

* டார்க் சாக்லேட், தேன், தயிர் ஆகிய மூன்று பொருட்களையும் நன்றாக  கலக்கவும். 

* இப்போது கொஞ்சம் கொஞ்சமாக முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலவை  மென்மையாகும் வரை மெதுவாக கலக்கவும். 

* இந்த கலவையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி  ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். இதனை நீங்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்து கூட  குளிரூட்டலாம். 

* இதன் மீது டார்க் சாக்லேட்டை உருக்கி சேர்க்கவும். அவ்வளவு தான் நமது சுவையான இனிப்பு தயார். 

*இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். கண்டிப்பாக முயற்சித்து பாருங்கள்.

Views: - 29

0

0