குழந்தைகளை குஷிப்படுத்தும் சுவையான ஃப்ரூட் ரைஸ்!!!

16 April 2021, 10:49 pm
Quick Share

டைட்டிலை படித்தவுடனே வித்தியாசமாக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா… ஆம், இந்த முற்றிலும் வித்தியாசமான ரெசிபியை ஒரு முறை செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் கண்டிப்பாக இதனை ஜாலியாக சாப்பிடுவார்கள். இது கோடை காலத்திற்கு ஏற்ற ஒரு உணவு வகையாகும். இப்போது இந்த ஃப்ரூட் ரைஸ் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்: 

பாஸ்மதி அரிசி – ஒரு கப் நெய் – 4 தேக்கரண்டி பட்டை- 2

கிராம்பு- 2

ஏலக்காய் – 2

பிரியாணி மசாலா- ஒரு தேக்கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு தேக்கரண்டி

நறுக்கிய பைனாப்பிள், ஆப்பிள் மற்றும் திராட்சைப்பழம்- ஒரு கப் 

புதினா – சிறிதளவு கொத்தமல்லித்தழை-  சிறிதளவு

மிளகாய்த்தூள்- ஒரு தேக்கரண்டி

உப்பு தேவைக்கேற்ப

செய்முறை:

* ஃப்ரூட் ரைஸ் செய்வதற்கு பாஸ்மதி அரிசியை சுத்தம் செய்து முதலில் பதினைந்து நிமிடங்கள் ஊற வைத்து அதனை வேக வைத்து தனியாக எடுத்து  வையுங்கள்.

* ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்து அதில் நெய் ஊற்றவும்.

* நெய் உருகியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.

* பிறகு கொத்தமல்லி தழை மற்றும் புதினா இலைகளை தூவி கிளறவும்.

* அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

* இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போன பிறகு மசாலா வகைகள் மற்றும் பழங்களை சேர்த்து கிளறுங்கள்.

* இப்போது வேக வைத்த சாதத்தை சேர்க்கவும்.

* அடுப்பை சிம்மில் வைத்து ஐந்து நிமிடங்கள் கிளறி இறக்கவும். 

* அவ்வளவு தான்… சுவையான ஃப்ரூட் ரைஸ் தயார்.

Views: - 30

0

0