ருசியான மோமோஸ், காரசாரமான சாஸ் செம காம்பினேஷன்… செய்து சாப்பிடலாம் வாங்க!!!

8 April 2021, 3:49 pm
Quick Share

மோமோஸ் என்பது தமிழ்நாட்டில் அவ்வளவு ஃபேமஸ் இல்லை என்றாலும், இது  சந்தேகத்திற்கு இடமின்றி வட இந்தியாவில் மிகவும் பிரபலமான தெரு உணவு ஆகும். இருப்பினும்  தொற்றுநோயால், இந்த சுவையான தெரு உணவுகளை நாம் சாப்பிட முடியாமல் போகிறது. இவை காய்கறிகள் அல்லது இறைச்சியால் செய்யப்படுகிறது. இதனோடு காரமான சாஸ் சேர்த்து சாப்பிடுவது சுவையை அதிகரிக்கும்.  இவற்றை வேகவைத்தும் சாப்பிடலாம் அல்லது வறுத்தெடுக்கலாம். இப்போது மோமோஸ் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

செய்முறை:

ஒரு அகலமான பாத்திரத்தில் 1 கப் மைதா மாவு, சிறிது உப்பு மற்றும் ஒரு சிட்டிகை பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி மாவை பிசையவும். மாவை பிசைந்த பிறகு அதனை சிறிது நேரம் ஊற வைக்கலாம்.

உள்ளே வைக்கும் பூரணம் செய்வதற்கு, ஒரு கடாயில், சிறிது நறுக்கிய பூண்டு, இஞ்சி, நறுக்கிய வெங்காயம், கேரட் மற்றும் முட்டைக்கோஸ் சேர்க்கவும். இதில் சிறிது உப்பு மற்றும் மிளகு சேர்த்து ½ தேக்கரண்டி சோயா சாஸ் மற்றும் வினிகர் சேர்க்கவும். குறைந்த தீயில் இதனை 2 நிமிடங்கள் வதக்கவும்.

ஊற வைத்த மாவிலிருந்து சிறிதளவு எடுத்து அதனை பந்தாக உருட்டவும். அதை ஒரு ஃபோர்க் கரண்டி  கொண்டு உருட்டி ஒரு சிறிய வட்டத்தை உருவாக்குங்கள். இரண்டு  பக்கங்களிலிருந்து அதை உருட்டவும். நாம் செய்து வைத்த பூரணத்தை நடுவில் நிரப்பவும். பிறகு  எல்லா பக்கங்களிலிருந்தும் அதை மூடுங்கள்.

இதனை ஒரு இட்லி பாத்திரத்தில் வைத்து 5-7 நிமிடங்கள் வேக விடவும். சாஸ் தயாரிக்க, சிறிது தக்காளி, காய்ந்த சிவப்பு மிளகாய், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். அவ்வளவு தான்… சுவையான மோமோஸ் மற்றும் காரசாரமான சாஸ் தயார்.

Views: - 2

0

0

Leave a Reply