குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான புரோட்டீன் லட்டு ரெசிபி!!!

3 March 2021, 1:00 am
Quick Share

நீங்கள் அடிக்கடி சோர்வடைந்து விடுகிறீர்களா…? மாலை நேரத்தில் டீ, காபியுடன் நொறுக்கு தீனி சாப்பிடுவதற்கு பதிலாக ஆரோக்கியமான தின்பண்டங்களை சாப்பிட பழகிக் கொள்ளுங்கள். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது ஆரோக்கியமான மற்றும் சுவையான புரோட்டீன் லட்டு. ஆனால், வறுத்த அல்லது சர்க்கரை நிரம்பிய ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை சாப்பிடுவதற்கு பதிலாக, வீட்டில் தயாரிக்கப்பட்ட புரோட்டீன் லட்டுக்களை நீங்கள் ஏன் சாப்பிடக்கூடாது? இது குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு தின்பண்டமாகும். 

தேவையான பொருட்கள்:

120 கிராம் – பேரிச்சம் பழம் 

2 தேக்கரண்டி – பாதாம்

2 தேக்கரண்டி – ஆளிவிதை தூள்

2 தேக்கரண்டி – சியா விதை தூள்

2 தேக்கரண்டி – கோகோ தூள்

2 தேக்கரண்டி – நறுக்கிய கருப்பு திராட்சை

1 தேக்கரண்டி – இஞ்சி சாறு

1/4 தேக்கரண்டி – ஏலக்காய் தூள்

1 தேக்கரண்டி – பாதாம் எண்ணெய்

1/4 தேக்கரண்டி – இலவங்கப்பட்டை தூள்

செய்முறை:

* புரோட்டீன் லட்டு செய்வதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

*இவற்றை நன்றாக கலந்து கொள்ளவும்.

* சிறிய பகுதிகளை எடுத்து எலுமிச்சை அளவிலான பந்துகளாக உருட்டவும்.

* ஒரு தட்டில் காய்ந்த தேங்காயை பரப்பி வையுங்கள்.

*நாம் தயாரித்த இந்த லட்டுக்களை தேங்காயில் போட்டு உருட்டவும்.

* 15 நிமிடங்கள் லட்டுக்களை குளிர வைக்கவும்.

*உங்களுக்கு பிடித்தால் சிறிதளவு நெய் கூட சேர்த்து கொள்ளலாம்.

*அவ்வளவு தான்… டேஸ்டான புரோட்டீன் லட்டுக்கள் தயார்.

Views: - 243

1

0