மசாலாப் பொருட்களை சேமிக்க வித்தியாசமான வழிகள்!!!

23 April 2021, 8:27 pm
Quick Share

நம் சமையலறையில் மிகவும் அவசியமான பொருள் என்றால் அது மசாலாப் பொருட்கள் தான். பெரும்பாலும் அனைத்து சமையலிலும் மசாலாப் பொருட்களின் பயன்பாடு இருக்கும். இத்தகைய முக்கியமான  மசாலாப் பொருட்களை சேமிக்க ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முறை தேவை. அப்போது தான் அவை விரைவில் கெட்டுப் போகாமலும், அதன் தரம் குறையாமலும் இருக்கும். 

நீங்கள் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் மசாலாப் பொருட்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், பல்வேறு மசாலாப் பொருள்களைப் பயன்படுத்தினாலும் அல்லது சில அடிப்படைப் பொருள்களைப் பயன்படுத்தினாலும், அனைவருக்கும் மசாலாப் பொருள்களைச் சேமிக்க ஒரு ஸ்மார்டான மற்றும் எளிதில் அணுகக்கூடிய வழி தேவை. எனவே, உங்கள் மசாலாப் பொருள்களை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் சேமிக்க இந்த யோசனைகளை டிரை பண்ணி பாருங்க.

■ அவற்றைத் தொங்க விடுங்கள்:

தனிப்பட்ட மசாலா ஜாடிகளை வாங்கி அவற்றின் மூடிகளில் ஒரு ஓட்டை போட்டுக் கொள்ளுங்கள். அந்த துளை வழியாக ஒரு கம்பி அல்லது ஒரு கயிறு கட்டி,  சுவரில் அந்த மசாலாப் பொருள்களைத் தொங்க விடுங்கள்.

■ டெஸ்ட் டியூப்

உங்கள் சமையலறையில் நகைச்சுவையைச் சேர்க்க டெஸ்ட் டியூப்களில் உங்கள் மசாலாப் பொருள்களை சேமித்து வைக்கலாம்.

■ ஃப்ரிட்ஜுக்கு அருகில் வையுங்கள்:

சுவருக்கும் உங்கள் குளிர்சாதன பெட்டிக்கும் இடையில் இருக்கும் சிறிய இடத்தை உங்களை  மசாலாப் பொருள்களை சேமிக்க விவேகமான முறையில் நீங்கள்  பயன்படுத்தலாம்.

■ டின்கள்:

 டின்கள் இடத்தை சேமிக்கவும், விஷயங்களை ஒழுங்கமைக்கவும் ஒரு சிறந்த வழியாகும். உங்கள் வேலையை எளிதாக்க ஒவ்வொரு டின்னிலும் அதில் என்ன உள்ளது என்பதை  லேபிளிடுங்கள்.

■ காந்த மசாலா ஜாடிகள் (Magnetic spice jars): 

உங்கள் மசாலாப் பொருட்களை சேமிக்க உலோக ஜாடிகளை வாங்கவும். இந்த ஜாடிகளை கதவுகளில்  ஒட்டி வைத்து, இடத்தை சேமிக்கவும்.

Views: - 22

0

0

Leave a Reply