ரெஸ்டிரண்ட் ஸ்டைல் சிக்கன் 555 உங்களுக்கு செய்யத் தெரியுமா…???

22 February 2021, 8:59 am
Quick Share

ரெஸ்டிரண்ட் சிக்கன் 555 ரெசிபி பற்றி நிச்சயமாக நீங்கள் கேள்விபட்டு இருக்க வேண்டும். இதனை ரெஸ்டாரண்டிற்கு சென்று தான் சாப்பிட வேண்டும் என்பது கிடையாது. இதனை நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஈசியாக செய்து விடலாம். உங்கள் வீட்டில் இருக்கும் நபர்களை அசத்த கண்டிப்பாக இந்த ரெசிபியை டிரை பண்ணி பாருங்க…

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 250 கிராம்

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி 

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி 

கரம் மசாலா – 1 தேக்கரண்டி 

உப்பு – சுவைக்கேற்ப 

அரிசி மாவு – 1 தேக்கரண்டி ரவை – 1 தேக்கரண்டி

எண்ணெய் – 3 தேக்கரண்டி  கறிவேப்பிலை -ஒரு கொத்து 

செய்முறை:

*சிக்கன் 555 செய்வதற்கு முதலில் சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து நன்கு கழுவி கொள்ளவும்.

*ஒரு அகலமான பாத்திரத்தில் சிக்கன் துண்டுகளை போட்டு இதனோடு மிளகாய் தூள், மஞ்சள் தூள், அரிசி மாவு, ரவை, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

*இந்த கலவையை முப்பது நிமிடங்கள் ஃபிரிட்ஜில் வைத்து விடவும்.

*சிக்கன் அரை மணி நேரம் ஊறியதும் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிக்கன் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். 

*எண்ணெய் காய்ந்ததும் சிக்கன் துண்டுகளை போட்டு மொறுவலாக பொரித்து எடுக்கவும்.

*சிக்கன் துண்டுகளை பொரித்த பின் கறிவேப்பிலை இலைகளையும் போட்டு பொரிக்கவும்.

*இதனை பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகள் மீது தூவி சூடாக பரிமாறவும். 

Views: - 2

0

0

Leave a Reply