உங்க வீட்ல யாருக்கும் பீட்ரூட் பிடிக்காதா… இந்த ரெசிபி டிரை பண்ணி பாருங்க!!!

1 May 2021, 1:30 pm
Quick Share

பச்சடி என்பது நம்  உணவில் ஒரு பொதுவான இடத்தைக் கொண்டிருக்கிறது. இது  வெள்ளரி முதல் கீரை சார்ந்த தயாரிப்புகள் வரை பல வகைகளில் வருகிறது. பீட்ரூட் பச்சடி அத்தகைய ஒரு மாறுபாடாகும். இது சாதம், சப்பாத்தி போன்ற  உணவுகளுடன் நன்றாகச் செல்லும். மேலும் இது உங்கள் உணவின் சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் திறனைக் கொண்டுள்ளது.

பீட்ரூட் ஊட்டச்சத்தின் ஒரு அற்புதமான மூலப்பொருளாகும். இந்த காய்கறியில் உயிரணு ஆரோக்கியம், வளர்சிதை மாற்றம், எலும்பு வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை அதிகரிக்க பங்களிக்கும் அத்தியாவசிய வைட்டமின்கள், நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் தாதுக்கள் உள்ளன.

பீட்ரூட்டில் கலோரிகள் குறைவாகவும், சத்துக்கள் நிறைந்தும் இருக்கின்றன.  மற்றும் இதில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது ஆரோக்கியமான உணவைத் தயாரிப்பதற்கு ஏற்ற ஒரு உணவுப் பொருளாக அமைகிறது.

தயிர் ஒரு எளிய பால் தயாரிப்பாக தெரிந்தாலும், கால்சியம், வைட்டமின் B2, வைட்டமின் B12, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. தயிர் வயிற்றில் லேசானது மற்றும் பாலை விட ஜீரணிக்க எளிதானது. மேலும் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தி, எலும்பு வலிமை மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு பங்களிக்கிறது. இப்போது பீட்ரூட் பச்சடி எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

1 பீட்ரூட்

2 கப் தயிர் 

சுவைக்க கருப்பு உப்பு

1 தேக்கரண்டி வறுத்த சீரகத்தூள்

சுவைக்கு ஏற்ப சிவப்பு மிளகாய் தூள்

சுவைக்க சாட் மசாலா

1/4 கப் வெங்காயம்

1 தேக்கரண்டி பச்சை மிளகாய் 

2 தேக்கரண்டி கொத்தமல்லி 

செய்முறை:

* பச்சடி செய்வதற்கு முதலில் பீட்ரூட்டை தோலுரித்து, அது  மென்மையாக மாறும்  வரை தண்ணீரில் கொதிக்க வைக்கவும்.

* இப்போது வேகவைத்த பீட்ரூட்டை பேஸ்டாக அரைத்து கொள்ளவும். அடுத்து தயிர், பீட்ரூட், உப்பு, வறுத்த சீரகத்தூள், சிவப்பு மிளகாய் தூள், பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலைகளை ஒரு கிண்ணத்தில் கலக்கவும்.

* இந்த கலவையை குறைந்தபட்சம் 2 மணிநேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்த பின் பரிமாறவும்.

* பச்சடி தயாரிக்கும் போது, ​​வறுத்த சீரகப் பொடி மிகவும் நறுமணமானது மற்றும் தீவிரமான சுவை கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 

* இந்த பச்சடியி்ல் முட்டைக்கோசு அல்லது உலர்ந்த புதினா இலைகளை கூட  நீங்கள்  சேர்க்கலாம்.

Views: - 51

0

0

Leave a Reply