இவ்வளவு சுலபமா சிக்கன் கிரேவியா…. பார்க்கும் போதே சாப்பிட தூண்டுது!!!

5 August 2020, 10:00 am
Quick Share

அசைவ பிரியர்களின் முதல் விருப்பம் பெரும்பாலும்  சிக்கன் தான். COVID-19 காரணமாக மூடப்பட்டு இருந்த உணவகங்கள் என்ன தான் திறக்கப்பட்டு இருந்தாலும் பலரும் அதில் உணவு வாங்கி உண்ண அஞ்சுகிறார்கள். எனவே அவர்களை குஷிப்படுத்தும் விதமாக எளிய முறையில் கோழி கறி கிரேவி எவ்வாறு தயாரிப்பது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: 

சிக்கன் ஊற வைக்க-

எலும்புகளுடன் கோழி- 750 கிராம்

தயிர்- 1 கப்

மஞ்சள் தூள்- ½ தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது- 2 தேக்கரண்டி 

சுவைக்கு ஏற்ப உப்பு

பிரியாணி இலைகள்- 2

கோழிக்குழம்புக்கு- 

தேங்காய் எண்ணெய் அல்லது தாவர எண்ணெய்- 2 தேக்கரண்டி

ஏலக்காய்- 4

கிராம்பு- 5

மிளகு- 6

வெங்காயம்- 2

தக்காளி- 2

இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்டி

சீரகம் தூள்- 1 தேக்கரண்டி

காஷ்மீரி மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி

கொத்தமல்லி தூள்- 1 தேக்கரண்டி

கரம் மசாலா- 1/2 தேக்கரண்டி

 கொத்தமல்லி இலைகள்- ¼ கப் 

புதினா இலைகள்- ¼ கப் 

செய்முறை:

* ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்யப்பட்ட கோழியை எடுத்துக் கொள்ளுங்கள். தயிர், மஞ்சள், இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்க்கவும். அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து, இதனை ஒவ்வொரு  கோழி துண்டு மீதும் சரியாக பூசவும். 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

* ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பிரியாணி இலைகள், ஏலக்காய், கிராம்பு மற்றும் கருப்பு மிளகுத்தூள் சேர்க்கவும். இப்போது பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து பழுப்பு நிறம் வரும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.

* சுவைக்கு ஏற்ப உப்பு சேர்க்கவும். இஞ்சி-பூண்டு விழுது, சீரகம் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் சேர்க்கவும். அனைத்தையும் நன்றாக கலக்குங்கள்.

* இப்போது வாணலியில் ஊற வைத்த கோழியை  சேர்த்து அதிக தீயில் சமைக்கவும். கோழியை ஊற வைக்க பயன்படுத்தப்பட்ட  கிண்ணத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து மீதமுள்ள கலவையை வாணலியில் ஊற்றவும்.

* கிளறி விட்டு சமைக்கவும். அது கொதிக்க ஆரம்பித்ததும், குறைந்த தீயில் மேலும் 15 நிமிடங்கள் சமைக்கவும்.

* 15 நிமிடங்களுக்குப் பிறகு, கரம் மசாலா சேர்க்கவும்.

* நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் புதினா இலைகளைச் சேர்க்கவும். அடுப்பை அணைத்து சூடாக பரிமாறவும்.

Views: - 11

0

0