ஒரே ஒரு முறை இந்த இளநீர் பாயாசம் செய்து பாருங்கள்… சுவையில் அசந்து போய்டுவீங்க…!!!

24 February 2021, 8:32 am
Quick Share

விசேஷம் என்றாலே கண்டிப்பாக பாயாசம் இருக்கும். பல வகையான பாயாசம் இருக்கிறது. அதில் ஒன்று தான் இளநீர் பாயாசம். இது செய்வதற்கு எளிதாக இருப்பது மட்டும் அல்லாமல் அசத்தலான ருசியில் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த பாயாசம் பிடிக்கும். அது போல உங்கள் வீட்டிற்கு யாரேனும் விருந்தினர்கள் வந்தால் அவர்களுக்கு இந்த பாயாசத்தை செய்து கொடுத்து அசத்தலாம். 

தேவையான பொருட்கள்:

கொழுப்பு நிறைந்த பால் – 1 1/2 கப்

கெட்டியான தேங்காய் பால் – 1/2 கப்

இளநீர் கூழ் – 1/2 கப்

சர்க்கரை – 1 தேக்கரண்டி

கண்டென்ஸ்டு மில்க் – 2 தேக்கரண்டி

ஏலக்காய் பொடி – இரண்டு சிட்டிகை

அரைப்பதற்கு…

இளநீர் கூழ் – 1/2 கப்

இளநீர் – 3/4 கப்

செய்முறை:

*இளநீர் பாயாசம் செய்வதற்கு முதலில் இளநீர் கூழ் மற்றும் இளநீர் ஆகிய இரண்டையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.

*அடுப்பில் பால் பாத்திரத்தை வைத்து அதில் பாலை ஊற்றி ஐந்து நிமிடங்கள் மட்டும் கொதிக்க விடவும்.

*பால் கொதித்ததும், கண்டென்ஸ்டு மில்க் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.

*இது கெட்டியாகி கிரீமியாக வரும் வரை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருங்கள்.

*பிறகு இதனை ஆற வைத்து கொள்ளலாம்.

*இதனோடு நாம் அரைத்து வைத்த இளநீர் கூழ், ஏலக்காய் பொடி மற்றும் தேங்காய் பால் ஊற்றி கலக்கவும்.

*அவ்வளவு தான்… இளநீர் பாயாசம் இப்போது பரிமாற தயாராக உள்ளது.

குறிப்பு:

*இந்த பாயாசம் செய்ய நாம் பயன்படுத்தும் இளநீர் கூழ் சாஃப்டாக இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். தேங்காய் போல கடினமாக இருக்கக்கூடாது.

*உங்களுக்கு பிடிக்கும் என்றால் பாயாசத்தில் கடைசியாக நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து சேர்க்கலாம்.

*இளநீர் பாயாசத்தின் சுவை கூடுதலாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இதற்கு பயன்படுத்தும் பால் முழு கொழுப்பு நிறைந்த பாலாக இருக்க வேண்டும்.

*உங்களிடம் கண்டென்ஸ்டு மில்க் இல்லாமல் போனாலும் பரவாயில்லை. பாயாசம் சுவையாக தான் இருக்கும்.

Views: - 27

0

0