மாலை நேர ரெசிபி- உருளைக்கிழங்கு தயிர் சீஸ் போண்டா செய்வது எப்படி? 

25 March 2020, 2:09 pm
Cheese-Potato-Bonda updatenews360
Quick Share

மாலை   நேரம் சுவையாக   அமைய இந்த உருளைக்   கிழங்கு சீஸ் போண்டாவை  உங்கள் குடும்பத்தினருக்கு   செய்து தாருங்கள். காபி மற்றும்   டீ, உடன் இதை உண்டால் அத்தனை ருசியாக இருக்கும். இதை   உங்கள் வீட்டு சிறிய குழந்தைகள் முதல் பெரிய குழந்தைகள்   வரை அனைவருக்கும் கொடுக்கலாம். சரி இதை தயார் செய்வது எப்படி   என்பதை இதில் காண்போம்.

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு – ஒன்று

துருவிய சீஸ் – ஒரு கப்

சோள மாவு (கார்ன்ஃப்ளார்) – ஒரு டேபிள்ஸ்பூன்

மைதா மாவு – ஒரு  தேக்கரண்டி 

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி 

மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி 

கெட்டித்தயிர் – அரை கப்

சாட் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்

ஆய்ந்த செலரி கீரை- ஒரு தேக்கரண்டி 

எண்ணெய், உப்பு – தேவைக்கு   ஏற்ப

Cheese-Potato-Bonda updatenews360

உருளைக்கிழங்கு தயிர் சீஸ் போண்டா செய்முறை:

  • உருளைக் கிழங்கை   வேக வைத்து தனியாக   எடுத்து, தோலுரித்து மசித்து   வைத்துக் கொள்ளுங்கள்.
  • மேலே  குறிப்பிட்டுள்ள  அளவில் சோள மாவுடன், மைதா மாவு, மிளகாய்த் தூள், உப்பு, இஞ்சி – பூண்டு விழுது ஆகியவற்றுடன்  தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
  • வேக வைத்து, மசித்து   வைத்துள்ள உருளைக்கிழங்குடன், சீஸ் துருவல்  மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்துப் நன்கு பிசைந்து   கொள்ளவும். பின்பு இவற்றை சிறிய உருண்டைகளாக பிடித்து  எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • வாணலியில் நீங்கள்   பயன்படுத்தும் எண்ணெயை ஊற்றி   காய வைக்கவும்.
  • பின்பு உருண்டைகளை   கரைத்து வைத்துள்ள மாவில் முக்கி எடுத்து  எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
  • பின்பு தயிருடன், சாட் மசாலாத்தூள் சேர்த்துக்  கலக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
  • இதனுடன் பொரித்த   சீஸ் போண்டாக்களை போட்டு, அதன் மேலே நறுக்கி வைத்துள்ள  செலரி கீரைகளை தூவி பரிமாறலாம்.
  • உங்களுக்கான சுவையான உருளைக்கிழங்கு   சீஸ் போண்டா தயார்.
  • இதை நீங்களும் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள்  தோழிகளே!