வெங்காயம் இல்லாமலே உணவு சமைக்கலாமா? உங்களுக்கான பல உணவுகளின் சிம்பிள் உணவுகுறிப்பு டிப்ஸ்! 

20 March 2020, 3:49 pm
food updatenews360
Quick Share

வெங்காயம்  அரிந்து கண்  கலங்குவதை, அதன்  விலையை கேட்டு கலங்கியவர்கள் இங்கு  அதிகம். வெங்காயம் இல்லாமல் உணவு சமைக்க  முடியுமா என்று இங்கு சிலருக்கு சந்தேகம் இருக்கும். ஆமாங்க  வெங்காயம் இல்லாமலேயே மிக அருமையான, சுவையான உணவுகளை நம்மால்  சமைக்க முடியும். வெங்காயம் இல்லாமல் என்ன வகையான உணவுகளை சமைக்கலாம்  என்பதை இங்கு காண்போம்.

மோர்க் குழம்பு :

மோர்க்குழம்பை  வெங்காயம் இல்லாமலே  சமைத்து உண்ணலாம். வெங்காயத்தை   தவிர்த்து விட்டு, அதனுடன் தேங்காய், காய்ந்த மிளகாய், உடைத்த கடலை  மற்றும் இஞ்சி ஆகியவற்றை சேர்த்து தாளித்து அரைத்து கொள்ளுங்கள். பின்பு  இந்த கலவையை தாளித்து

  மோருடன்  சேர்த்து கொதிக்க  வைத்து உண்ணலாம். நல்ல  சுவையுடன் இருக்கும். வேலையும்  எளிமையாக முடிந்துவிடும்.

புளி தொக்கு : 

புளித்  தொக்கு செய்வதற்கு  தேவைப்படும் முக்கியமான  மூலதனம் புளி தான். எனவே புளி  தொக்கு செய்வதற்கு வெங்காயம் மற்றும்  தக்காளி என்ற இரு உணவுப்பொருட்களை தேவைப்படாது.

புளிக் குழம்பு : 

புளிக் குழம்பு  செய்வதற்கு வெங்காயம்  தேவைப்படாது. வெங்காயத்திற்கு  பதிலாக வெண்டைக்காய், எண்ணெய் கத்தரிக்காய்  என வேறு காய்கறிகள் சேர்த்து உண்ணலாம். இதுவும்  நன்றாக வித்தியாசமான சுவையுடன் இருக்கும்

ரசம் கூட்டு :

 ரசம்  வைப்பதற்கு  தக்காளி மற்றும்  புளி தான் முக்கியமாக பொருளாகும்.  எனவே இந்த வகையான ரசம் கூட்டு வைப்பதற்கு   வெங்காயம் தேவைப்படாது.

முதலில் மிளகு, சீரகம்  போன்றவற்றை இடித்து காரசாரமான  ரசம் வைத்துக் கொள்ளவும். பின்பு  அதனுடன் கடலை பருப்பு புடலங்காய் கூட்டு அல்லது புதினா, வேர்க்கடலை சட்னி   சேர்த்து வைக்கலாம், இதற்கும் வெங்காயம் தேவைப்படாது. இது நல்ல சுவையுடன்  இருக்கும். இந்த சமையல் புதுவிதமாகவும், நல்ல சுவையுடனும் இருக்கும். இதை  மணமணக்க சாதத்துடன் பிசைந்து உண்ணலாம்.

வெரைட்டி ரைஸ் :

 கேரட் சாதம், பீட்ரூட் சாதம், புதினா சாதம் போன்ற  வெரைட்டி சாதங்களை சமைக்கும் போது வெங்காயம் சேர்க்க தேவையில்லை.  இவற்றை தாளித்து சமைத்தாலும், அப்படியே குக்கரில் வைத்து வேக வைத்தாலும்  சுவை மாறாமல் இருக்கும்.

வெஜிடபிள் பிரியாணி : 

வெஜிடபிள் பிரியாணி  மற்றும் தக்காளி சாதத்தை  வெங்காயம் இல்லாமல் சமைத்து  உண்டால் நல்ல சுவையுடன் இருக்கும்.

வெங்காய  சுவை உங்களுக்கு  கண்டிப்பாக வேண்டுமென்றால்  வெங்காயத்திற்கு பதிலாக நீங்கள் வெங்காயத்தாளை  பொடிப்பொடியாக நறுக்கி உபயோக்கிக்கலாம்.

வத்தக் குழம்பு : 

வத்தக் குழம்பில்  பெரும்பாலான வீடுகளில்  வெங்காயம் சேர்க்க மாட்டார்கள். வெங்காயம்  இல்லாமல் சமைத்தாலும் வத்தக்குழம்பு நல்லதொரு  சுவையை தரக்கூடியது. 

கீரைக் குழம்பு :

  கீரைக்குழம்பு  கெட்டியாக இருக்கும், இதற்கு  வெங்காயம் சேர்க்காமல் சமைத்தாலும்  நல்ல சுவையுடன் இருக்கும்.

சிலருக்கு  கண்டிப்பாக வெங்காய  சுவை தேவைப்படும் அவர்கள் சாலட், க்ரீன்  ஆனியன், மற்றும் உலர்ந்த வெங்காயம் போன்ற வெங்காயத்தில்  உள்ள இதர வகைகளை பயன்படுத்தலாம். இவை அனைத்து வகைகளுமே கடைகளில் கிடைக்கும். வெங்காய  விலை உயர்வை பற்றி இனி கவலை வேண்டாம். வெங்காயம் இல்லாத சமையலை நீங்களும் சமைத்துப் பாருங்கள்  நண்பர்களே.