இந்த தீபாவளிக்கு நேந்திரம் பழ ஜாமுன் செய்து பாருங்களேன்… ஒரு முறை செய்தால் பிறகு விடவே மாட்டீங்க!!!

13 November 2020, 3:46 pm
Quick Share

கேரளா என்றாலே நமக்கு நினைவில் வருவது நேந்திரம் பழமும் புட்டும் தான். நேந்திரம் சிப்ஸ் பிடிக்காதவர்களே இல்லை என சொல்லலாம். நேந்திரம் பழத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இன்று நேந்திரம் பழத்தை வைத்து ஜாமுன் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க… இதனை இந்த வருட தீபாவளிக்கு செய்து என்ஜாய் பண்ணுங்க. 

தேவையான பொருட்கள்:

நேந்திரம் பழம்- 2

நெய்- 3 தேக்கரண்டி

சர்க்கரை- 400 கிராம்

ஏலக்காய் பொடி- 1/2 தேக்கரண்டி

உப்பு- ஒரு சிட்டிகை

செய்முறை:

ஜாமுன் செய்வதற்கு முன்பு முதலில் அதனை ஊற வைக்க சர்க்கரை பாகு தயார் செய்து கொள்வோம். சர்க்கரை பாகு செய்வதற்கு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 400 கிராம் சர்க்கரை மற்றும் 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும். சர்க்கரை கரைந்து வரும் சமயத்தில் ஏலக்காய் பொடி மற்றும் உப்பை சேர்த்து விடலாம். 

பாகு சிரப் பதத்திற்கு வந்தால் போதும். இதற்கு கம்பி பதம் எதுவும் பார்க்க வேண்டாம். நமக்கு தேவையான பதம் கிடைத்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். அடுத்ததாக நேந்திரம் பழத்தை ஒரு இன்ச் அளவிற்கு வெட்டி எடுக்கவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் விடவும். 

நெய் உருகியதும் வெட்டி வைத்த நேந்திரம் பழத்தை போட்டு பொரித்து எடுக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளுங்கள். பொரித்த பழத் துண்டுகளை ஒரு தட்டில் போட்டு ஆற விட்டு கொள்ளவும். இவை ஆறிய பிறகு சர்க்கரை பாகில் போட்டு விடலாம். இரண்டில் இருந்து மூன்று மணி நேரம் அவை அதிலே இருக்கட்டும். அவ்வளவு தான்… எச்சில் ஊற வைக்கும் நேந்திரம் பழ ஜாமுன் தயார். 

Views: - 23

0

0

1 thought on “இந்த தீபாவளிக்கு நேந்திரம் பழ ஜாமுன் செய்து பாருங்களேன்… ஒரு முறை செய்தால் பிறகு விடவே மாட்டீங்க!!!

Comments are closed.