இந்த மாதிரி தக்காளி சட்னி செஞ்சு கொடுங்க… சப்பு கொட்டி சாப்பிடுவாங்க!!!

17 February 2021, 7:33 pm
Quick Share

இட்லி, தோசைக்கு தக்காளி சட்னி போன்ற காம்பினேஷன் போல எதுவும் இருக்க முடியாது. சட்னி ருசியாக இருந்தால் நான்கு இட்லி சாப்பிடும் இடத்தில் கூடுதலாக சாப்பிடுவார்கள். இன்று ஒரு எளிமையான முறையில் ருசியான தக்காளி சட்னி எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

தக்காளி- 3

கடுகு- 2 தேக்கரண்டி

வெந்தயம்- 1/2 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு- 1/2 தேக்கரண்டி 

பெருங்காயப் பொடி- ஒரு சிட்டிகை 

மஞ்சள் தூள்- ¼ தேக்கரண்டி 

மிளகாய் தூள்- ½ தேக்கரண்டி  

சுவைக்கு ஏற்ப உப்பு

நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை- ஒரு கொத்து

செய்முறை: 

*ஒரு பாத்திரத்தில், 2 தேக்கரண்டி  நல்லெண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், அதில் 2-3 தேக்கரண்டி கடுகு சேர்த்து வதக்கவும்.

* அடுத்து ½ தேக்கரண்டி வெந்தயம் மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயப் பொடியை எண்ணெயில் போடவும். பிறகு ½ தேக்கரண்டி உளுத்தம்பருப்பு  சேர்க்கவும். தோராயமாக 2-3 தக்காளியை நறுக்கி அதனையும் சேர்த்து வதக்கவும். இதனை தொடர்ந்து ஒரு கொத்து  கறிவேப்பிலையை  வாணலியில் சேர்க்கவும்.

*இதில் ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள், ½ தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், மற்றும் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்க்கவும். தக்காளி மென்மையாகும் வரை இதை நடுத்தர தீயில் வதக்கவும்.

*தக்காளி சாஃப்டாக வதங்குவதற்கு சிறிது தண்ணீர் சேர்க்கவும். தக்காளி நன்றாக வெந்ததும் அதனை ஒரு கரண்டியை பயன்படுத்தி நசுக்கவும். 

*தக்காளி சேர்த்ததே தெரியாத அளவுக்கு அது வதங்கியதும் அடுப்பை அணைத்து உங்களுக்கு பிடித்தமான டிஷோடு பரிமாறவும். 

Views: - 63

0

0