சம்மரில் செய்து சாப்பிட இதை விட ருசியான, ஆரோக்கியமான ரெசிபி இருக்குமா என்ன…???

7 April 2021, 2:49 pm
Quick Share

நம்மில் பலருக்கு  ஆரோக்கியமாகவும்  சாப்பிட வேண்டும், அதே சமயம் அந்த உணவானது ருசியாகவும் இருக்க வேண்டும். அந்த சரியான சமநிலையைத் தரக்கூடிய ஆரோக்கியமான சமையல் குறிப்புகளை நாம் அடிக்கடி தேடுவோம். அந்த வகையில் உங்களுக்கு உதவ ஒரூ அற்புதமான ரெசிபி இங்கே உள்ளது. இது  சுவையாகவும் மிகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். வீட்டிலேயே ஸ்ட்ராபெர்ரி-சுவை கொண்ட கிரேக்க தயிர் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

ஸ்ட்ராபெரி கிரேக்க தயிர்: 

1. ஸ்ட்ராபெர்ரி: 

இது இனிப்பு சுவையை  மட்டுமல்லாமல், அற்புதமான பழ நறுமணத்தையும் கொண்டிருக்கிறது. மேலும் நம் உடலுக்கு அவசியமான வைட்டமினான வைட்டமின் C அதிக அளவில் இருக்கிறது. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்கிறது மற்றும் ஃப்ரீ ரேடிக்கள்களால் ஏற்படும் தீங்கில் இருந்து  நம்மை பாதுகாக்கிறது.

2. கிரேக்க தயிர்: 

இது மென்மையானது மற்றும் உங்கள் வாயில் உருகும் தன்மையைக் கொண்டிருப்பதைத் தவிர, கிரேக்க தயிர் புரதத்தின் மூலமாகும். இது எலும்புகள் மற்றும் தசைகளின் கட்டுமானத் தொகுதி என்று அறியப்படுகிறது. மேலும் இது உங்கள் குடல் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்யக்கூடிய புரோபயாடிக்குகளையும் கொண்டுள்ளது.

எவ்வாறாயினும், கிரேக்க தயிர் என்றால் என்ன என பலருக்கு தெரியாது. இது வேறு ஒன்றும் இல்லை, தயிரில் உள்ள அனைத்து நீரும் நீக்கப்பட்டு கெட்டியாக இருக்கும் தயிரே கிரேக்க தயிராகும்.  இது குறைந்த கலோரிகளைக் கொண்டிருக்கிறது. ஆனால் வழக்கமான தயிரில் காணப்படும் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் தக்க வைத்துக் கொள்கிறது.

இந்த ஸ்ட்ராபெரி-சுவை கொண்ட கிரேக்க தயிர் செய்முறையை வீட்டிலேயே ஈசியாக எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

4 முதல் 5 ஸ்ட்ராபெர்ரிகள்

1 கப் கிரேக்க தயிர்

1 ½ கரண்டி தேன்

5 முதல் 7 புதினா இலைகள்

செய்முறை:

*அனைத்து ஸ்ட்ராபெர்ரிகளிலிருந்தும் அதன் காம்புகளை அகற்றி அவற்றை நறுக்கி கொள்ளவும்.

*இப்போது, ​​தேன் மற்றும் புதினாவுடன் சேர்த்து நறுக்கிய  ஸ்ட்ராபெர்ரிகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும்.

*உங்களுக்கு ஸ்ட்ராபெர்ரி எந்த பதத்தில் வேண்டுமோ அந்த அளவிற்கு அரைத்து கொள்ளவும். 

*அடுத்து, இந்த ஸ்ட்ராபெர்ரி கலவையை கிரேக்க தயிருடன் ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும். நீங்கள் கடையில் இருந்து கிரேக்க தயிரை வாங்கலாம், அல்லது வீட்டில் செய்த தயிரை ஒரு காட்டன் துணியில் வடிகட்டி பயன்படுத்தலாம்.

*அனைத்து பொருட்களையும் நன்கு கலக்கவும். 

அவ்வளவு தான்… ஸ்ட்ராபெர்ரி சுவை கொண்ட கிரேக்க தயிர் தயாராக உள்ளது. இதனை பருகுவதற்கு முன் குளிர்சாதன பெட்டியில் சிறிது நேரம் வைக்கலாம். கூடுதலாக, நீங்கள் விரும்பினால்  தேன் மற்றும் புதினா சேர்க்கலாம். இந்த தயிரில் அவை இனிமையும் புத்துணர்ச்சியும் சேர்க்கின்றன. ஆனால் நீங்கள் அவர்களை விரும்பவில்லை என்றால், அவற்றைத் தவிர்க்கலாம்!

Views: - 0

0

0

Leave a Reply