சுவையான குலோப்ஜாமூன் வீட்டிலேயே செய்வது எப்படி?

22 March 2020, 6:44 pm
food receipe updatenews360
Quick Share

இனி குலோப்ஜாமூனை நீங்கள் அதிகம் விலை கொடுத்து வாங்க வேண்டாம். வீட்டிலேயே சிம்பிளான முறையில் குளோப்ஜாமூன் செய்வது எப்படி என இதில் காண்போம்.

தேவையான பொருட்கள்:

குலோப்ஜாமூன் மாவு -200 கிராம்
வெள்ளை சர்க்கரை – 400 கிராம்
ஏலக்காய் பொடி -சிறிதளவு
நெய் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – தேவைக்கேற்ப

செய்முறை :

 • ஒரு பாத்திரத்தில் குலோப்ஜாமூன் மாவை போட்டு, சரியான அளவு தண்ணீர் ஊற்றி, சாஃப்டாக பிசைந்து கொள்ள வேண்டும்.
 • கால் மணி நேரம் குலோப்ஜாமூன் மாவை ஊற விடவும்.
 • நெய்யை கைகளில் தடவிக் கொள்ளவும். பின்பு
  குலோப்ஜாமூன் மாவை சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து எடுத்து வையுங்கள்.
 • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில்
  குலோப்ஜாமூன் உருண்டைகளை பொரித்து எடுக்கவும்.
 • இவை பொன்னிறமாக மாறும் வரை காத்திருந்து பின்பு எடுத்துக் கொள்ளலாம்.
 • பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, சர்க்கரையை சேர்க்கவும். பின்பு சர்க்கரை கரையும் வர கலக்கவும்.
 • அதனுடன் ஏலக்காய் பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த சர்க்கரை தண்ணீர் கையில் ஒட்டாதவாறு இருக்க வேண்டும். அப்போது தான் குலோப்ஜாமூனனை அதில் ஊற வைக்க முடியும்.
 • சர்க்கரை பாகு மற்றும் குலோப்ஜாமூன் ஆறும் வரை காத்திருக்க வேண்டும்.
 • பின்பு இந்த சர்க்கரை பாகில் குலோப்ஜாமூன் உருண்டைகளை ஊற வைக்கவும்.
 • குறைந்தது 2 மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். சுவையான குலோப்ஜாமூன் தயார்.
 • இப்போது நீங்கள் எடுத்து உண்ணலாம். நீங்களும் இதை வீட்டில் ட்ரை செய்து பாருங்கள் நண்பர்களே, சுவையாக இருக்கும்.

Leave a Reply