பாட்டி கைவண்ணத்தில் ‘கூட்டாஞ்சோறு’ ரெசிபி..!

21 March 2020, 9:30 am
Quick Share

சிறுவயதில் நாம் அனைவருமே ஒன்றாக இணைந்து கூட்டாஞ்சோறு செய்து சாப்பிட்டு விளையாடுவோம். அதில் உப்பு, காரம் இல்லாமல் இருப்பினும் பாசம் அதிகம் இருக்கும். அதுவும் பாட்டி கைப்பக்குவத்தில்   உண்ணும்போது அதனுடைய ருசியே தனி.  உங்கள் சுவையை தூண்டும் கூட்டாஞ்சோறு சமையல் செய்து பாருங்க.. பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான கூட்டாஞ்சோறு ரெசிபியை நீங்களும் செய்து பாருங்க…!!!

சமைக்க தேவையானவை பொருட்கள்:

  • உளுத்தம் பருப்பு – கடலைப்பருப்பு – 2 மேசைக்கரண்டி
  • கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயம் – ஒரு மேசைக்கரண்டி
  • நல்லெண்ணெய், நெய் – தேவையான அளவு
  • தேங்காய் – அரை மூடி
  • சின்ன வெங்காயம் – 2
  • சீரகம், மிளகு, வெந்தயம் – தலா ஒரு தேக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் – 2
  • ஆல் பர்பஸ் பொடி – ஒரு தேக்கரண்டி
  • பூண்டு – 3 அரைக்க
  • பச்சை மிளகாய் – 5
  • சாம்பார் பொடி – ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் பொடி – அரை தேக்கரண்டி
  • காரட் – ஒன்று
  • காலிஃப்ளவர் – கால் பகுதி
  • பீன்ஸ் – 15
  • வேக வைத்த துவரம் பருப்பு – அரை கப்
  • புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
  • அரிசி – 2 கப்
  • கத்தரிக்காய் – 2
  • சிறிய முள்ளங்கி – 6
  • உப்பு – தேவையான அளவு
  • முளைக்கட்டிய பச்சைபட்டாணி,
  • கொத்தமல்லி – தேவைக்கு

கூட்டாஞ்சோறு செய்முறை :

Step 1. காய்கறிகள் அனைத்தையும் நீளவாட்டில் நறுக்கவும். பருப்பை நல்லெண்ணெய், பூண்டு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்து மசித்து வைக்கவும். பின்னர் புளியைக் நன்கு கரைத்து வைக்க வேண்டும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

Step 2. வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி பின்பு கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் காய்கறிகளையும், தேவையான அளவு உப்பும் சேர்த்து வதக்க வேண்டும்.

Step 3. பிறகு குக்கரில் அரிசி, புளிக் கரைசல், பருப்பு, காய்கறி, அரிசி, உப்பு, சாம்பார் பொடி மற்றும் மஞ்சள் பொடி போன்றவைற்றை சேர்த்து வேக்க வேண்டும்.

Step 4. நன்கு வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து மிதமான தீயில் வேக்க வேண்டும். கடைசியாக ஆல் பர்பஸ் பொடி, கொத்தமல்லித் தழை சேர்க்க வேண்டும். சுட சுட கூட்டாஞ்சோறு ரெடி..