வெறும் இட்லி மாவு இருந்தால் போதும்… மொறு மொறு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் தயார்!!!

Author: Hemalatha Ramkumar
27 June 2022, 7:16 pm
Quick Share

மாலை நேரத்தில் சூடான டீயுடன், மொறு மொறுவென்று போண்டா, பஜ்ஜி இருந்தால் சும்மா அட்டகாசமா இருக்கும். இதற்கு வெறும் இட்லி மாவு அல்லது தோசை மாவு இருந்தாலே போதும். இட்லி மாவு மட்டும் வைத்து செம டேஸ்டான போண்டா எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
இட்லி மாவு – 1 கப்
கடலை மாவு – 2 தேக்கரண்டி
அரிசி மாவு – 2 தேக்கரண்டி
மிளகாய்தூள் – 1 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி தழை – சிறிதளவு
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 உப்பு – தேவையான அளவு

செய்முறை:
*ஒரு அகலமான பாத்திரத்தில் மேலே கூறிய பொருட்களை எல்லாம் ஒன்றாக கலந்து கொள்ளவும்.

*உப்பு போடும்போது கவனமாக இருக்கவும்.

*இட்லி மாவில் ஏற்கனவே உப்பு இருப்பதால் சற்று கவனமாக இருங்கள்.

*அதே போல் தண்ணீர் தெளித்து கொண்டால் போதும். ஏனெனில், தண்ணீர் அதிகமாக இருந்தால் எண்ணெய் அதிகப்படியாக குடித்து விடும்.

*ரொம்ப கெட்டியாக இருந்தால் போண்டா உள்ளே வேகாத மாதிரி இருக்கும். எனவே தண்ணீர் சேர்க்கும் போது கவனமாக இருங்கள்.

*இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மாவை போண்டா போல் உருட்டி ஒவ்வொன்றாக போடவும்.

*இரு பக்கமும் சிவந்து வந்தவுடன் எடுத்து விடலாம்.

*அவ்வளவு தான். சூடான மொறு மொறு போண்டா தயார்.

Views: - 527

0

0