தேங்காய் பூரி கேள்விபட்டு இருக்கீங்களா… ஒரு முறை டிரை பண்ணி பாருங்க… அப்புறம் அடிக்கடி செய்து சாப்பிடுவீங்க!!!

Author: Hemalatha Ramkumar
3 December 2022, 7:26 pm

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சப்பாத்தியை விட பூரி சாப்பிடுவதையே விரும்புவார்கள். ஆனால் எப்போதும் பூரியை கோதுமை, மைதா மாவு வைத்து செய்வதற்கு பதிலாக அரிசி மாவு மற்றும் தேங்காய் துருவல் வைத்து வித்தியாசமாக செய்து பாருங்கள்.

அரிசி மாவில் பூரி செய்வதற்கு இரண்டு கப் அரிசி மாவு எடுத்து கொள்ளவும். எந்த கப்பில் அரிசி மாவு அளந்தீர்களோ அதே கப்பில் ஒரு கப் அளவு தேங்காய் துருவல் எடுத்து கொள்ளவும். இந்த தேங்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் நைசாக அரைத்து கொள்ளவும்.

இதனை அரிசி மாவுடன் சேர்த்து கலந்து வையுங்கள். இப்போது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். இந்த தண்ணீரை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசையவும்.

பின்னர் இதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மாவு சேர்த்து விரித்து கொள்ளவும். அரிசி மாவு என்பதால் ஓரங்களில் கிராக் விழலாம். இதனை சரிசெய்ய ஒரு கிண்ணத்தை வைத்து ரௌண்டாக்கி கொள்ளலாம்.

இப்போது கடாயில் எண்ணெயை சூடாக்கி பூரியை போட்டு எடுத்தால் சுவையான அரிசி மாவு, தேங்காய் பூரி தயார். இதற்கு நீங்கள் வழக்கமாக சாப்பிடும் பூரி மசாலா, பட்டர் மசாலா அல்லது சாம்பார் போன்ற காம்பினேன்ஷன்கள் அருமையாக இருக்கும்.

  • Coolie Movie Latest Updates கூலி படத்தின் சூப்பர் அப்டேட்… ரஜினி பிறந்தநாளில் லோகேஷ் அறிவிப்பு!
  • Views: - 741

    0

    0