வீட்டிலே கிரீமியான சைவ சீஸ் செய்வது எப்படி…???

1 May 2021, 10:29 am
Quick Share

சைவ உணவு பழக்கத்தில் உள்ளவர்கள் முதல் லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவர்கள் வரை பால் மற்றும் பால் பொருட்களை பயன்படுத்தாமல் இருக்கலாம். பால் பொருட்களில் ஒன்றான  சீஸ் தவிர்க்க உங்கள் காரணம் எதுவாக இருந்தாலும், அதை விட்டுக்கொடுப்பது என்பது  எளிதல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் சேர்க்கும் ஒவ்வொரு டிஷுக்கும் சீஸ் ஒரு கூடுதல் சுவை சேர்க்கிறது!

கவலைஎப்பட வேண்டாம்.  சீஸிற்கு ஆரோக்கியமான மாற்றீட்டை இந்த பதிவில் பார்ப்போம். அதிலும் இதை நீங்கள் சுலபமாக வீட்டிலேயே தயார் செய்யலாம்! இது ஒரு  சுவையான மற்றும் ஆரோக்கியமான மாற்றாகவும் செயல்படுகிறது. 

தேவையான பொருட்கள்:

¾ கப் உருளைக்கிழங்கு துண்டுகள்

¾ கப் இனிப்பு உருளைக்கிழங்கு துண்டுகள் 

2 பல் பூண்டு 

¼ கப் முந்திரி (ஊறவைத்தது)

1 தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகர்

2 தேக்கரண்டி ஊட்டச்சத்து ஈஸ்ட்

½ தேக்கரண்டி வெங்காய தூள்

½ தேக்கரண்டி உப்பு

1/4 கப் ஆலிவ் எண்ணெய்

1/4 கப் தண்ணீர்

செய்முறை:

* முதலில் உருளைக்கிழங்கு துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் குளிர்ந்த நீரை சேர்க்கவும். 

* இதனை அடுப்பில் வைத்து 

தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். 

* இதனை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வாருங்கள்.

* வெப்பத்தை குறைத்து, உருளைக்கிழங்கு மென்மையாகும் வரை சுமார் 8-10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். 

* இப்போது 

உருளைக்கிழங்கை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி கூடவே பூண்டு, முந்திரி, ஆப்பிள் சைடர் வினிகர், ஊட்டச்சத்து ஈஸ்ட், வெங்காய தூள், உப்பு, ஆலிவ் எண்ணெய் மற்றும் தண்ணீரை அதில் சேர்த்து அரைக்கவும். 

* அவ்வளவு தான்… சீஸ் இப்போது தயாராக உள்ளது.

* இந்த செய்முறைக்கு முந்திரியை  பயன்படுத்துவதற்கு முன், அதனை குறைந்தது இரண்டு மணி நேரம் ஊறவைக்க நினைவில் கொள்ளுங்கள்.

Views: - 118

1

0

Leave a Reply