சுவையான சரவண பவன் ஹோட்டல் டிபன் சாம்பார் எப்படி செய்வது???

4 September 2020, 9:23 pm
Quick Share

சரவண பவன் ஹோட்டல் டிபன் சாம்பாரை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அதன் சுவையே தனி தான். ஆனால் தற்போது தொற்று காரணமாக வெளியில் செல்வதை நாம் அனைவரும் தவிர்த்து வருகிறோம். எனவே இன்று இந்த சாம்பாரை வீட்டிலே எவ்வாறு செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு- 1/4 கப்

பூசணிக்காய்- 1 கப்

கடுகு- ஒரு தேக்கரண்டி

சீரகம்- 1 1/4 தேக்கரண்டி

வெந்தயம்- 1/2 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்- 7

பச்சை மிளகாய்- 3

சின்ன வெங்காயம்- 25

தக்காளி- 2

மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

பெருங்காய தூள்- 1/4 தேக்கரண்டி

புளி கரைசல்- 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை- 2 கொத்து

எண்ணெய்- 4 தேக்கரண்டி

நெய்- 1/2 தேக்கரண்டி

செய்முறை:

சாம்பார் செய்ய முதலில் ஒரு குக்கரை எடுத்து அதில் 1/2 மணி நேரம் ஊற வைத்து சுத்தம் செய்த துவரம் பருப்பை சேர்க்கவும். கூடவே ஒரு கப் பூசணிக்காய், 3 பச்சை மிளகாய், ஒரு தக்காளி ஆகியவற்றை சேர்க்கவும். ஒன்றில் இருந்து ஒன்றரை கிளாஸ் தண்ணீர் மற்றும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி குக்கரை மூடவும். 

குக்கரில் நான்கு விசில் வரும் வரை காத்திருங்கள். பிறகு குக்கரை திறந்து பருப்பு மற்றும் பூசணிக்காயை மசித்து கொள்ளவும். அடுத்து ஒரு கடாயில் 2 தேக்கரண்டி தனியா, 5 காய்ந்த மிளகாய் சேர்த்து 1 – 2 நிமிடங்கள் வறுக்கவும். பிறகு ஒரு தேக்கரண்டி சீரகம், 1/2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வறுத்து அடுப்பை அணைத்து விடலாம். இப்போது 1/4 தேக்கரண்டி பெருங்காய பொடி சேர்த்து பொருட்கள் அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

இப்போது கடாயில் மூன்று தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஒரு தேக்கரண்டி கடுகு, 1/2 தேக்கரண்டி சீரகம், 2 காய்ந்த மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலை, 25 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் ஒரு கிளாஸ் தண்ணீர், தேவையான அளவு உப்பு  மற்றும் மசித்து வைத்த பொருட்களை சேர்க்கவும். 

ஒரு கொதி வந்த பின் இரண்டு தேக்கரண்டி புளி கரைசல் ஊற்றவும். மீண்டும் ஒரு கொதி வந்த பிறகு அரைத்து வைத்த சாம்பார் பொடியில் இருந்து இரண்டு தேக்கரண்டி போடவும். மேலும் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 3 – 4 நிமிடங்கள் கொதிக்க விடவும். கடைசியில் 1/2 தேக்கரண்டி நெய் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம். ருசியான சரவண பவன் டிபன் சாம்பார் தயார். 

Views: - 15

0

0