காரசாரமான பச்சை பட்டாணி தக்காளி கறி செய்வது எப்படி?

19 March 2020, 5:38 pm
food updatenews360
Quick Share

பொதுவாக  தக்காளியை குழம்பு,  தக்காளி சாதம் போன்றவற்றில் முக்கிய  பொருளாகவும், பொரியல், ரசம் போன்றவற்றில்  இதர பொருட்களாக சேர்ப்பார்கள். ஆனால் தக்காளி   மற்றும் பட்டாணியை வைத்து குருமா செய்வது எப்படி இருக்கும் என்பதை  இதில் காணலாம். தக்காளியுடன் காரசாரமான பொருட்களை சேர்த்து குருமா   செய்து சாதத்துடன் வைத்து உண்டால் நல்ல சுவையுடன் இருக்கும். இந்த  ரெசிபி உங்களுக்கு காரசாரமான புதுமையான சுவையை தருவது மட்டுமில்லாமல், பட்டாணி  மற்றும் தக்காளியை சேர்ப்பதால் நல்லதொரு சுவையை தரக்கூடியது. சரி காரசாரமான பச்சை   பட்டாணி தக்காளி   கறி செய்வது எப்படி  என்பதை இதில் காணலாம்.

food updatenews360

தேவையான  பொருட்கள்:

பட்டாணி – 1 கப் 

தக்காளி – 1 கப் 

கொத்தமல்லி இலை –  சிறிதளவு

பச்சை மிளகாய் – 3

உப்பு – சிறிதளவு

மிளகாய் பொடி – 1/2 தேக்கரண்டி 

கொத்தமல்லி பொடி – 1 தேக்கரண்டி

நீர்  – தேவையான  அளவு

சீரகம் – 1/2 தேக்கரண்டி 

மஞ்சள் – சிறிதளவு

எண்ணெய் – தேவைக்கு   ஏற்ப 

பெருங்காயத்தூள் –  சிறிதளவு

செய்முறை:

  1. தக்காளி, பச்சை  மிளகாய் மற்றும் கொத்தமல்லி  தழைகளை நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

2. வாணலியை அடுப்பில்  வைத்து அதில் சிறிதளவு  எண்ணெய் ஊற்றுங்கள்.  

3. அடுப்பை  மிதமான சூட்டில்  வைக்கவும், எண்ணெய்  காய்ந்ததும் அதில் பெருங்காயத்தூள்,  சீரகம், பச்சை மிளகாய் சேர்க்கலாம் ஆகியவற்றை  சேர்க்கலாம். பின்பு சிலநொடிகள் கழித்து தக்காளியை சேர்த்து  நன்கு வதக்கவும்.

4. தக்காளியின்  வாசம் போகும் வரை  நன்கு வதக்க வேண்டும்.  பின்பு அதனுடன் மிளகாய் தூள்,மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு  சேர்த்து கிளறி விடுங்கள். அடுப்பை மிதமான தீயில் வைத்து இந்த கலவையை  கிளறி விடவும். பின்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

5. தண்ணீர்  கொதிக்க ஆரம்பித்தவுடன் அதனுடன்  பச்சை பட்டாணியை சேர்த்து 6 நிமிடம்  வரை கொதிக்க வைக்க வேண்டும். காய்கறிகள்  நன்றாக வெந்தவுடன் கிளறி விடவும். காய்கள்  வெந்து விட்டதா என பார்க்க அதை நசுக்கி பார்க்கலாம். கிரேவி  போல நன்கு கெட்டியாக இருக்கும். அடுப்பை அனைத்து இதை இறக்கி  விடலாம்.

6. சுவையான தக்காளி பட்டாணி கறி ரெடி.  இதை சாதம் , பரோட்டா அல்லது சப்பாத்தியுடன்   வைத்து உண்டால் நல்ல சுவையுடன் இருக்கும். இதை   நீங்களும் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள் தோழிகளே, நல்ல   சுவையுடன் இருக்கும். இது உங்களுக்கு புதுவிதமான ஒரு சுவையை  தரும்.