சர்க்கரைவள்ளி கிழங்கில் அல்வா பண்ணலாமா… இதோ உங்களுக்காக!!!

Author: Hemalatha Ramkumar
20 September 2024, 7:07 pm

சர்க்கரைவள்ளி கிழங்கு அப்படியே சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். இந்த கிழங்கு பலரது ஃபேவரட் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட சர்க்கரைவள்ளி கிழங்கை அல்வாவாக செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்? ஆம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா ரெசிபி தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம். 

Sugarcan yam - update news 360

தேவையான பொருட்கள்:

சர்க்கரைவள்ளி கிழங்கு- 2

வெல்லம்- 3/4 கப் 

நெய்-  5 டேபிள் ஸ்பூன் முந்திரி பருப்பு- 10 ஏலக்காய் பொடி- சிறிதளவு கோதுமை மாவு- 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

இரண்டு சர்க்கரைவள்ளி கிழங்கை மண் எதுவும் இல்லாமல் சுத்தமாக கழுவி இரண்டாக நறுக்கி கொள்ளவும். 

இதனை இட்லி குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம்.

சர்க்கரைவள்ளி கிழங்கு நன்றாக வெந்ததும் அதனை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். 

இதனோடு 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.  அதிக தண்ணீர் சேர்க்க வேண்டாம். 

இந்த அல்வாவிற்கு தேவையான இனிப்பு சேர்ப்பதற்கு 3/4 கப் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளலாம். 

இதில் 3 முதல் 4 டேபிள் ஸ்பூன் அளவு தண்ணீர் ஊற்றி வெல்லம் நன்றாக கரையும் வரை கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளலாம். 

இதற்கு வெல்ல பாகு பதம் பார்க்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. 

இப்போது அல்வா செய்வதற்கு கடாயை அடுப்பில் வைத்து 1 1/2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி நெய் உருகியதும் அதில் 2 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு சேர்த்துக் கொள்ளவும். 

கோதுமை மாவு வறுபட்டு நன்றாக வாசனையை வரும் பொழுது நாம் மறைத்து வைத்த சர்க்கரை வள்ளி கிழங்கு கூழை சேர்க்கவும். 

நன்றாக கிளறிய பிறகு வெல்லத்தை வடிகட்டி சேர்த்துக் கொள்ளலாம். 

இப்போது கைவிடாமல் நன்றாக கிளறி கொண்டே இருக்கவும். 

கலவை கெட்டியானவுடன் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து மீண்டும் நன்றாக கிளறவும். 

அல்வா கெட்டி ஆக ஆக அதில் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளற வேண்டும். நமக்கு 4 முதல் 5 டேபிள் ஸ்பூன் நெய் தேவைப்படும். 

இறுதியாக வாசனைக்காக சிறிதளவு ஏலக்காய் பொடி மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்த்து அல்வாவில் சேர்க்கவும். 

இப்போது சுவையான சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா தயார்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!