ஹோட்டல் ஸ்டைல் சின்ன வெங்காயம் சாம்பார் செய்வது எப்படி???

By: Poorni
14 October 2020, 11:00 am
Quick Share

தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான ஒரு குழம்பு என்றால் அது சாம்பார் தான். சாம்பார் செய்வதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் எல்லாம் ஒன்று என்றாலும், ஒவ்வொருவரின் சாம்பாரும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதிலும் நாம் விசேஷங்களுக்கு சென்று சாப்பிடும் சாம்பார் அனைவரது ஃபேவரெட் என்று சொல்லலாம். இன்று நாம் பார்க்க இருப்பது மிகவும் ருசியான சின்ன வெங்காய சாம்பார். 

தேவையான பொருட்கள்: அரைக்க:-

துவரம் பருப்பு- 1 கப்

எண்ணெய்- ஒரு தேக்கரண்டி

கொத்தமல்லி விதைகள்- ஒரு தேக்கரண்டி

சீரகம்- ஒரு தேக்கரண்டி

கடலைப்பருப்பு- ஒரு தேக்கரண்டி

வெந்தயம்- ஒரு சிட்டிகை

காய்ந்த மிளகாய்- 6

பெருங்காயம்- 1/4 தேக்கரண்டி

துருவிய தேங்காய்- 1 1/2 தேக்கரண்டி

சின்ன வெங்காயம்- 5

சாம்பார் செய்வதற்கு:-

சின்ன வெங்காயம்- ஒரு கப்

தக்காளி- 1

கடுகு- 1/2 தேக்கரண்டி

கடலைப்பருப்பு- 1/2 தேக்கரண்டி

சீரகம்- 1/2 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்- 2

பெருங்காயம்- 1/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

புளி கரைசல்- 2 கப்

வெல்லம்- ஒரு சிறிய துண்டு

எண்ணெய்- 3 தேக்கரண்டி

கறிவேப்பிலை- ஒரு கொத்து

கொத்தமல்லி தழை- சிறிதளவு

செய்முறை:

சின்ன வெங்காயம் சாம்பார் செய்வதற்கு முதலில் ஒரு கப் துவரம்பருப்பை குக்கரில் சுத்தம் செய்து சேர்த்து கொள்ளவும். பருப்பு வேக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூன்று விசில் வந்தவுடன் தனியாக எடுத்து வைக்கவும். கடாய் ஒன்றில் எண்ணெய் ஊற்றி கொத்தமல்லி விதைகள், சீரகம், கடலைப்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். 

பொருட்கள் நிறம் மாறியதும் பெருங்காய தூள், துருவிய தேங்காய், சின்ன வெங்காயம் சேர்த்து அதன் ஈரத்தன்மை போகும் வரை வதக்கவும். இப்போது இந்த பொருட்கள் அனைத்தையும் ஆற வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து கொள்ளவும். அடுத்து கடாயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காய தூள் சேர்த்து தாளிக்கவும். 

கடுகு பொரிந்தவுடன் சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். இப்போது புளி கரைசல் மற்றும் அரைத்த மசாலா விழுதை சேர்த்து மூன்று நிமிடங்கள் கொதிக்க விடவும். 

அடுத்ததாக வேக வைத்த பருப்பு மற்றும் தண்ணீர்  சேர்த்து பத்து நிமிடங்கள் மேலும் கொதிக்க வைக்கவும். கடைசியில் ஒரு துண்டு வெல்லம் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து சூடாக பரிமாறவும்.  

Views: - 80

0

0