இந்த மாதிரி செய்து கொடுத்தால் கருணைக் கிழங்கு வேண்டாம்னு சொல்லவே மாட்டாங்க!!!

Author: Hemalatha Ramkumar
8 March 2022, 1:12 pm
Quick Share

பெரும்பாலானவர்கள் வீட்டில் கருணைக் கிழங்கு பெரிய அளவில் சமைக்கப்படுவதில்லை. கருணைக் கிழங்கு குழம்பு, சிப்ஸ், வறுவல் மற்றும் பொரியல் போன்றவை கருணைக் கிழங்கு வைத்து நாம் செய்யக்கூடிய சில உணவு வகைகள் ஆகும்.

தேவையான பொருட்கள்:
கருணைக் கிழங்கு- 1/4 கிலோ
மிளகுத் தூள்- ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள்- ஒரு தேக்கரண்டி
மல்லி தூள்- ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா- ஒரு தேக்கரண்டி
புளி- தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது- ஒரு தேக்கரண்டி
மைதா மாவு- ஒரு தேக்கரண்டி
பிரட் தூள்- ஒரு தேக்கரண்டி
புதினா- ஒரு கைப்பிடி அளவு
உப்பு- தேவையான அளவு

செய்முறை:
*முதலில் கருணைக் கிழங்கினை தோல் நீக்கி, நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.

*பின்னர் புளி தண்ணீர் ஊற்றி வேக வையுங்கள்.

*இப்போது ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, நறுக்கிய புதினா இலைகள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.

*பச்சை வாசைனை போன பின் அடுப்பை அணைத்து விடலாம்.

*இதனோடு கருணைக் கிழங்கினை பிசைந்து சேர்க்கவும்.

*இந்த கலவையை உருண்டைகளாக உருட்டி மைதா மற்றும் பிரட் தூளில் பிரட்டி எடுக்கவும்.

*ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி உருண்டைகளை போடவும்.

*இருபுறமும் பொன்னிறமாக வறுப்பட்டதும் எடுத்து விடலாம்.

*அவ்வளவு தான்… ருசியான மொறு மொறு கருணைக் கிழங்கு கபாப் தயார்.

Views: - 899

0

0