குழந்தைகளுக்கு பிடித்தமான நன்னாரி சர்பத் வீட்டிலேயே தயாரிக்கலாம் வாங்க!

24 March 2020, 4:50 pm
nannari sarpath updatenews360
Quick Share

கோடைகாலங்களில்   நாம் விரும்பி அருந்தும்   பானங்களில் ஒன்று நன்னாரி சர்பத்   ஆகும். கோடை ஆரம்பித்தால் போதும் நன்னாரி சர்பத் கடைகள் கலை கட்ட ஆரம்பித்து விடும்  என்று சொல்லலாம்.

நன்னாரி சர்பத் என்பது   இயற்கையான முறையில் கிடைக்கக்கூடிய   வேரை வைத்து தயாரிக்கக் கூடிய பானம் ஆகும்.  ஆனால் இன்றைய காலங்களில் நன்னாரி சர்பத் கிடைப்பது   அரிதாகி விட்டது.

உண்மையில் நன்னாரி வேரை வைத்து செய்ய கூடிய ஒரு வகை பானம் ஆகும்.ஆனால் இப்பொழுது சுத்தமான நன்னாரி சர்பத் கிடைப்பது அரிதாகி விட்டது.

தற்போது   கிடைக்கும்  நன்னாரி சர்பத்தில் செயற்கை நிறமூட்டிகள் மற்றும் ப்ரெசர்வேடிவ்ஸ் சேர்க்கப்பட்டுள்ளதால்  இதில் நன்னாரியினால் கிடைக்கும் இயற்கையான நன்மைகள் கிடைக்காது. மாறாக இவை நம் உடலுக்கு  தீங்கு விளைவித்து விடும். சரி தற்போது இயற்கையான முறையில் நன்னாரி வேரை வைத்து சர்பத்   தயாரிப்பது எப்படி என்பதை இதில் காண்போம். 

nanaari sarpath updatenews360

நன்னாரிவேரின்மருத்துவ குணங்கள்:

  • நன்னாரி   வேர் உடல் உஷ்ணத்தை  குறைக்க உதவுகிறது.
  • ரத்தத்தை சுத்திகரிக்க  உதவுகிறது.
  • தோல் நோய்கள்  நம்மை அண்டாமல்   இருக்க செய்யும்.
  • செரிமான பிரச்சனைகளை   சரி செய்து உடலை சீராக   வைக்க உதவுகிறது.
  • சிறுநீர் சம்மந்தமான  பிரச்சனைகளை சரிசெய்து   விடும்.

நன்னாரி சர்பத் தயாரிக்க தேவையான   பொருட்கள்:

நன்னாரி வேர் – 50 கிராம்

கற்கண்டு – 200 கிராம்

லெமன் ஜூஸ்- 1 தேக்கரண்டி 

தண்ணீர்  – 3 கப்

நன்னாரி சர்பத் செய்முறை:

1.நன்னாரி வேரை நீரில்  சுத்தமாக கழுவிக் கொள்ளவும்.

2. சுத்தமான துணியால்   நன்னாரி வேரை துடைத்து   எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

3.  இந்த  வேரின்   மர வண்ணத்தில்   இருக்கும் பகுதியையும், வெள்ளை   வண்ணத்தில் இருக்கும் பகுதியையும்   தனித்தனியாக பிரித்தெடுக்கவும். வெள்ளை   நிற பகுதி நமக்கு தேவையில்லை என்பதால்,  அதை நீக்கி விட்டு மர வண்ணத்தில் இருக்கும்   பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

4. நன்னாரி வேரை சிறுசிறு துண்டுகளாக இடித்து   தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

5. ஒரு   பாத்திரத்தில்  3 கப் தண்ணீரை ஊற்றி   சூடு படுத்தவும். தண்ணீரில்   சிறிதளவு நுரை பொங்கியதும், அடுப்பை  அணைத்து நீரை இறக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்பு   வேரின் மர வண்ணத்தில் இருக்கும் பாகங்களை தண்ணீரில் சேர்க்கவும்.

6. பின்பு   இந்த பாத்திரத்தை  மூடி விடவும். ஒரு  நாள் இரவு முழுவதும்  அப்படியே வைக்கவும். வேர்   நன்றாக ஊற வேண்டும்.

7.அடுத்த நாள்  பாத்திரத்தை எடுத்து  வேருடன் சேர்த்து தண்ணீரை 5 நிமிடம்  சூடு படுத்துங்கள். அடுப்பிலிருந்து  இறக்கி பின்பு சுத்தமான, இலகுவான துணியால்  வேரை வடித்தெடுக்க வேண்டும்.

8. மிதமான சூட்டில்   அடுப்பை வைத்துக் கொண்டு கற்கண்டை,  நன்னாரி தண்ணீருடன் சேர்த்து சூடுபடுத்தவும். கற்கண்டு   கரையும் வரை கலக்கி விட்டு அடுப்பிலிருந்து இவற்றை   இறக்கிக் கொள்ளலாம். 

9. பின்பு   இதனுடன் லெமன்   ஜூசை சேர்த்துக்   கொள்ளவும். இவை நன்கு   ஆறியவுடன் காற்று புகாத   பாட்டிலில் ஊற்றி அடைத்து வைத்துக்  கொள்ளவும்.

10. பின்பு  3 தேக்கரண்டி   நன்னாரி சர்பத்தை   ஒரு டம்ளர் குளிர்ந்த   நீருடன் சேர்த்து நன்றாக கலக்கவும். தேவையெனில்   சிறிதளவு லெமன் ஜூஸ் சேர்த்துக் கொள்ளலாம்.

  • சுவையான, இனிப்பான   நன்னாரி சர்பத் தயார்.  உங்கள் குழந்தைகளுக்கும் பரிமாறி, நீங்களும்  அருந்தலாம்.
  • இயற்கையான   முறையில் தயாரிக்கப்பட்ட   நன்னாரி சர்பத் உடல் உஷ்ணத்தை  குறைப்பது மட்டுமில்லாமல், உடலுக்கு  ஏராளமான நன்மைகளை தருகிறது. முக்கியமாக   இது குழந்தைகளுக்கு தரக்கூடிய இயற்கையான ஜூஸ்   என சொல்லலாம்.
  • இந்த   சர்ப்பத்தை   நீங்களும் வீட்டில்   ட்ரை செய்து பாருங்கள்   தோழிகளே.