பார்க்கும் போதே சாப்பிட தூண்டும் நண்டு ஆம்லெட் செய்வது எப்படி…???

4 April 2021, 11:30 am
Quick Share

ஆம்லெட் பலரது ஃபேவரெட். அது போல நண்டு ஒரு ருசியான இறைச்சி வகையாகும். இவை.இரண்டையும் சேர்த்து சமைத்தால் எப்படி இருக்கும். சும்மா அசத்தலா இருக்கும். இன்று நாம் பார்க்க இருப்பது நண்டு ஆம்லெட். இது ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவும் கூட. இப்போது நண்டு ஆம்லெட் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்: 

சுத்தம் செய்த நண்டு- 3 பெரிய வெங்காயம்- 1 

சின்ன வெங்காயம்- 4 இஞ்சி, பூண்டு விழுது- ஒரு கரண்டி 

மிளகுத்தூள்- ஒரு கரண்டி

சீரகத்தூள்- ஒரு கரண்டி

மல்லித்தூள்- ஒரு கரண்டி சோம்புத்தூள்- 1/4 கரண்டி மஞ்சள் தூள்- 1/4 கரண்டி

கொத்தமல்லித்தழை- சிறிதளவு

உப்பு- தேவையான அளவு

ஆம்லெட் போட:

முட்டை-2

தேங்காய் எண்ணெய்- 2 கரண்டி 

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

நண்டு ஆம்லெட் செய்வதற்கு முதலில் நண்டை நன்றாக சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து ஆம்லெட் செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் அதில் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இதனை வேக வையுங்கள்.

வெந்த பிறகு கலவையை ஆற வைத்து நண்டின் சதைப்பகுதியை மட்டும் தனியாக பிரித்து எடுக்கவும். நண்டு வேக வைத்த தண்ணீரை அடுப்பில் வைத்து கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.

ஒரு பவுல் எடுத்து அதில் இரண்டு முட்டை, நண்டு வேக வைத்த கிரேவி இரண்டு தேக்கரண்டி, நண்டின் சதைப்பகுதி சிறிதளவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.

இப்போது ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும். கல் சூடானதும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி முட்டை கலவையை ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். இருபுறமும் திருப்பி போட்டு சூடாக பரிமாறவும்.

Views: - 0

0

0

Leave a Reply