குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஓரியோ சாக்லேட் பந்துகள் செய்வது எப்படி???

20 August 2020, 3:01 pm
Quick Share

இனிப்பு என்று சொன்னாலே நம் நினைவிற்கு வருவது சாக்லேட் தான். நீங்கள் ஒரு இனிப்பு ரசிகராக இருந்தால், சாக்லேட் உங்களுக்கு நிச்சயமாக பிடிக்கும். ஆனால் அதனை ஆர்டர் செய்வதற்கு பதிலாக, நீங்கள் அதை வீட்டில் எளிதாக செய்யலாம்.

ஒரு எளிய சாக்லேட் உணவு பண்டமான ஓரியோ சாக்லேட் பந்துகளை தயாரிக்கும் செய்முறையை தான்  இப்போது நாம் பார்க்க போகிறோம். இதன் சிறப்பு என்னவென்றால் இதனை செய்வதற்கு மூன்று பொருட்கள் மட்டுமே தேவைப்படுகின்றன: சாக்லேட் பிஸ்கட், கிரீம் சீஸ் மற்றும் வெள்ளை சாக்லேட் சிப்ஸ்.

செய்முறை:

* உங்களுக்கு தேவையான அளவு சாக்லேட் பிஸ்கட்டுகளை எடுத்து தூளாக்கி கொள்ளவும். பின்னர் அதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும். இதில் ஒரு சிறிய அளவு சாக்லேட் பவுடரை பின்னர் பயன்படுத்துவதற்காக  தனியாக எடுத்து வைக்கவும்.

* சாக்லேட் தூள் இருக்கும் கிண்ணத்தில், கிரீம் சீஸை  (சுமார் 230 கிராம்) சேர்த்து பொருட்கள் அனைத்தையும் நன்கு கலக்கவும்.

* பேக்கிங் தட்டில் வெண்ணெய் பேப்பரை விரிக்கவும். பின்பு  கலவையின் பகுதிகளை சிறிது சிறிதாக எடுத்து சிறிய உருண்டைகளாக உருட்டவும்.

* இப்போது பந்துகளை பேக்கிங் தட்டில் வைக்கவும், அவை ஒன்றுக்கு ஒன்று  தூரத்தில் வைக்கப்படுவதை உறுதிசெய்யுங்கள். 

* இந்த பேக்கிங் தட்டை குளிர்சாதன பெட்டியில் சுமார் 30 நிமிடங்கள் விடவும்.

* ஒரு மைக்ரோவேவ் கிண்ணத்தில், வெள்ளை சாக்லேட் சிப்ஸை எடுத்து மைக்ரோவேவில் சுமார் 30 விநாடிகள் உருக வைக்கவும். கிண்ணத்தை வெளியே எடுத்து ஒரு கரண்டியால் கிளறி அடர்த்தியான பேஸ்டை தயாரிக்கவும்.

* குளிர்சாதன பெட்டியில் இருந்து உணவு பண்டங்களை எடுத்து வெள்ளை சாக்லேட் கலவையில் நனைக்கவும்.

* முன்பே ஒதுக்கி வைக்கப்பட்ட சாக்லேட் பொடியை உணவு பண்டங்களுக்கு மேல் தூவி 10 நிமிடம் குளிரூட்டவும். அவ்வளவு தான். நமது சுவையான ஓரியோ சாக்லேட் பந்துகள் தயார். 

Views: - 38

0

0