ஆறு மாதம் ஆனாலும் இஞ்சி பூண்டு பேஸ்ட் கெடாமல் இருக்க உங்களுக்கு இரகசிய டிப்ஸ்!!!

Author: Hemalatha Ramkumar
18 September 2021, 9:37 am
Quick Share

புதிதாக சமைக்கத் தொடங்கியவர்களுக்கு எளிய சமையல் ஹேக்குகள் நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும். ஆனால் உண்மையில் சமையல் கலையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இந்த ஹேக்குகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஒவ்வொருவரும் தங்கள் சொந்த சமையல் மற்றும் நுட்பங்களை கையாளுகின்றனர். ஆனால் பல இந்திய சமையலறைகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் ஒரு மூலப்பொருள் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகும். இருப்பினும், நீங்கள் கடையில் வாங்கிய இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் ரசிகர் இல்லையென்றால், ஒவ்வொரு முறையும் கூடுதல் வேலை செய்வது போல் உணரலாம். ஆனால் கவலைப்பட வேண்டாம். இந்த எளிய செய்முறை ஹேக்கால் உங்களுக்கு ஒரு அற்புதமான வழி கிடைக்கும்.ஒ இது எளிதானது மட்டுமல்லாமல், ஐந்து-ஆறு மாதங்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல், அதே சமயம் ஃபிரஷாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:
150 கிராம் – இஞ்சி
250 கிராம் – பூண்டு
உப்பு
2-3 டீஸ்பூன்-எண்ணெய்

முறை:
*இஞ்சியை சுத்தம் செய்து தோல் உரிக்கவும்.
*பூண்டை சுத்தம் செய்து தோல் உரித்து கொள்ளவும்.
*இஞ்சியை மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்
*இதற்கு சிறிது நேரம் எடுக்கும் என்பதால் முதலில் இஞ்சியை அரைக்கவும்.
*இப்போது பூண்டை அரைக்கவும்.
*கொடுக்கப்பட்டுள்ள அளவில் உப்பு, எண்ணெய் சேர்க்கவும்.

மனதில் கொள்ள வேண்டியது என்ன?
*இஞ்சியின் அளவு குறைவாக இருக்க வேண்டும். ஏனெனில் அது வலுவான சுவை கொண்டது.
*இஞ்சியை மெல்லிய துண்டுகளாக வெட்டுவதை உறுதி செய்து கொள்ளவும். அதனால் அரைக்க எளிதாக இருக்கும். ஈரப்பதம் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
*தண்ணீரை பயன்படுத்த வேண்டாம்.

எப்படி சேமிப்பது?
*ஒரு கண்ணாடி பாட்டிலை கழுவி நன்கு உலர்த்தவும். இதில் பேஸ்டை சேமித்து வைத்து கொள்ளவும். இது குளிர்சாதன பெட்டியில் ஐந்து மாதங்கள் வரை இருக்கும், மற்றும் ஃப்ரீசரில் ஆறு மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும்.
*பாட்டிலில் காற்று புகாதவாறு பார்த்துக் கொள்ளவும்.

(உப்பு மற்றும் எண்ணெய் இஞ்சி பூண்டு விழுது நீண்ட காலம் நீடிக்க உதவுகிறது.)

Views: - 287

2

0