அட்டகாசமான ருசியில் ஹைதராபாத் மட்டன் கீமா ரெசிபி…!!!

Author: Hemalatha Ramkumar
1 October 2021, 1:27 pm
Quick Share

ஹைதராபாத் பிரியாணிக்கு மட்டும் பிரபலமானது அல்ல. இந்த அற்புதமான நகரத்தில் பல டேஸ்டான உணவு வகைகள் உள்ளன. அவற்றை பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறும் அளவிற்கு ஹைதராபாத் உணவுகள் இருக்கும்! ஹைதராபாத் சமையல் என்பது முகலாய, பாரசீக மற்றும் துருக்கிய மொழிகளின் சுவையான கலவையாகும். பல உத்வேகங்களுடன், இந்த உணவு ஒரு உண்பவரின் இதயத்தை வெல்லும் உணவுகளின் துடிப்பான சுவையை வழங்குகிறது.

கபாப், ஹலீம் முதல் சலான் வரை ஹைதராபாத் உணவுகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அதில் ஹைதராபாத் கீமா ரெசிபியை நிச்சயமாக நீங்கள் முயற்சிக்க வேண்டிய ஒரு உணவு வகை.

இந்த ரெசிபியானது கரம் மசாலா, சிவப்பு மிளகாய் தூள் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றின் காரமான உணவை கொடுக்கிறது. இந்த செய்முறையானது மற்ற கீமா உணவுகளை போலல்லாமல், பட்டாணி அல்லது உருளைக்கிழங்கினை பயன்படுத்தாது. இந்த உணவில் உங்களுக்கு மட்டனின் சுவை கிடைக்கும். சிறந்த பகுதி என்னவென்றால், இந்த ரெசிபி மிகவும் எளிமையானது.

செய்முறை:
*பிரஷர் குக்கரை அடுப்பில் வைக்கவும்.

*சிறிதளவு எண்ணெய் சேர்த்து வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

*கொத்தி வைத்த மட்டன் கறியை சேர்க்கவும்.

*தேவையான அளவு உப்பு, 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான அளவு மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலா மற்றும் ஒரு தேக்கரண்டி கருப்பு மிளகு சேர்த்து கிளறவும்.

*மட்டனில் உள்ள தண்ணீர் ஆவியாகும் வரை இதனை வேக வைக்கவும்.

*தக்காளி மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி கீமாவை மூன்று விசில்களுக்கு சமைக்கவும்.

*மட்டன் வேக நீண்ட நேரம் எடுக்கும், என்பதால் தான் இதனை நாம் பிரஷர் குக்கரில் சமைக்கிறோம். உங்களுக்கு குக்கர் சமையல் பிடிக்காது என்றால் நீங்கள் கடாயில் கூட சமைத்து கொள்ளலாம்.

*கடைசியில் கொத்தமல்லி இலைகள் மற்றும் நசுக்கிய கசூரி மேத்தி தூவி அலங்கரிக்கவும்.

*அவ்வளவு தான்… சுவையான ஹைதராபாத் கீமா தயார்!

*ஹைதராபாத் கீமா சப்பாத்தி, பூரி, தந்தூரி நானுடன் செம காம்பினேஷனாக இருக்கும்

Views: - 199

1

0