இந்த விநாயகர் சதுர்த்திக்கு செம ருசியான பிள்ளையார்பட்டி கொழுக்கட்டை செய்து வீட்ல இருக்கவங்கள அசத்துங்க!!!

Author: Hemalatha Ramkumar
6 September 2024, 6:15 pm

நாளை விநாயகர் சதுர்த்தி என்பதால் அனைவரும் தங்களது வீடுகளில் கொழுக்கட்டை செய்து பிள்ளையாரை வழிபடுவது வழக்கம். பிடி கொழுக்கட்டை, பூரண கொழுக்கட்டை, மோதகம் என்று பல்வேறு விதமான கொழுக்கட்டை வகைகள் உள்ளன. ஆனால் இந்த பிள்ளையார் சதுர்த்திக்கு மிகவும் வித்தியாசமான முறையில் பிள்ளையார்பட்டி கொழுக்கட்டை செய்து உங்கள் வீட்டில் இருப்பவர்களை அசத்துங்கள். இப்போது பிள்ளையார்பட்டி கொழுக்கட்டை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
1 கப்- பச்சரிசி
1/4 கப்- பாசிப்பருப்பு
1/2 கப்- வெல்லம்
2- ஏலக்காய்
3 கப்- தண்ணீர்
1/4 கப்- தேங்காய் துருவல்

செய்முறை
கொழுக்கட்டை செய்வதற்கு பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை நன்றாக சுத்தம் செய்து கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறவைத்த பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை ஒரு வெள்ளைத் துணியில் பரப்பி நிழலில் உலர்த்தவும்.

அரிசி நன்றாக காய்ந்த பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் மூன்று கப் தண்ணீர் சேர்க்கவும்.

தண்ணீர் கொதித்தவுடன் அரைத்து வைத்துள்ள மாவை சேர்க்கவும்.

தண்ணீர் முழுவதும் வற்றி மாவு நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து வெல்லம் சேர்த்து கிளறவும்.

கடைசியாக தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இப்போது நாம் தயார் செய்து வைத்த மாவை கொழுக்கட்டை மோல்டில் வைத்து எடுக்கவும்.

மோல்டு இல்லாதவர்கள் கைகளில் பிடித்து கூட வைக்கலாம்.

இட்லி குக்கரில் இந்த கொழுக்கட்டைகளை வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்தால் சூப்பரான பிள்ளையார்பட்டி கொழுக்கட்டை தயார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?