மீந்து போன இட்லி மாவில் சுவையான மொறு மொறு பொங்கனம்!!!

Author: Hemalatha Ramkumar
4 June 2022, 6:48 pm
Quick Share

மாவு மீந்து போய்விட்டால் அதனை மனசே இல்லாமல் தூக்கி எறியும் பெண்களுக்கு இது ஒரு அசத்தலான ரெசிபி. மீந்து போன மாவை வைத்து பொங்கனம் எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
மீந்து போன இட்லி மாவு- 1 கப்
மைதா மாவு- 4 தேக்கரண்டி
ரவை- 2 தேக்கரண்டி
கடுகு- ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு- ஒரு தேக்கரண்டி
தயிர்- 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வர மிளகாய்- 2
கறிவேப்பிலை- 1 கொத்து
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- 4 தேக்கரண்டி

செய்முறை:
*ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ரவை மற்றும் தயிர் ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.

*இதில் சிறிதளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து வையுங்கள்.

*இதனோடு மீதமுள்ள இட்லி மாவை கலந்து கொள்ளவும்.

*ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.

*எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

*கடுகு பொரிந்தவுடன் கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும்.

*இதனை கலந்து வைத்துள்ள மாவில் சேர்த்து கலந்து விடவும்.

*இப்போது ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து ஒரு கரண்டி மாவு ஊற்றவும்.

*நடுவில் குண்டாகவும், ஓரங்களில் மெலிசாகவும் சுடவும். சுற்றி எண்ணெய் ஊற்றவும்.

*ஒருபுறம் வெந்ததும் அதனை திருப்பி போட்டு, எடுத்தால் சுவையான பொங்கனம் தயார்.

Views: - 865

0

0