சத்தான, சுவையான சிறு கீரை பொரியல் ரெசிபி!!!

Author: Hemalatha Ramkumar
30 September 2021, 2:02 pm
Quick Share

பலருக்கும் பிடிக்காத ஒரு உணவு என்றால் அதில் கீரை முதல் இடத்தில் இருக்கும். கீரை என்றாலே அலறி ஒடுபவர்கள் உண்டு. ஆனால் உண்மையில் கீரையை செய்யும் விதத்தில் செய்தால் அதனை நிச்சயம் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். கீரையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. நம் உணவில் வாரத்தில் மூன்று நாட்கள் கட்டாயமாக கீரையை சேர்த்து கொள்ள வேண்டும். கீரையில் பல வகைகள் உண்டு. இன்று நாம் பார்க்க இருப்பது சுவையான மற்றும் சத்தான சிறு கீரை பொரியல் எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
சிறு கீரை- 2 கட்டு
எண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- 1/2 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு-ஒரு தேக்கரண்டி
சீரகம்- ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்- 5
பூண்டு- 10 பற்கள்
பெருங்காயப் பொடி- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- ஒரு கொத்து
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
துருவிய தேங்காய்- சிறிதளவு

செய்முறை:
*ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் போட்டு தாளிக்கவும்.

*கடுகு நன்றாக வெடித்தவுடன் அதில் காய்ந்த மிளகாய், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வாசனை வரும் அளவிற்கு வதக்கவும்.

*இப்போது ஆய்ந்து சுத்தம் செய்த கீரை, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.

*இந்த சமயத்தில் வாணலியை ஒரு மூடி போட்டு மூடவும். இது பத்து நிமிடங்கள் நன்றாக வேகட்டும்.

*கீரையில் உள்ள ஈரம் வற்றும் வரை மிதமான தீயில் இது அப்படியே இருக்கட்டும்.

*கடைசியில் சிறிதளவு தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து சூடாக பரிமாறவும்.

Views: - 258

0

0