அட்டகாசமான ருசியில் ஸ்பைசி சிக்கன் ரோஸ்ட்!!!

Author: Hemalatha Ramkumar
28 November 2021, 3:36 pm
Quick Share

நான் வெஜ் பிரியர்கள் மத்தியில் சிக்கன் எப்போதுமே ஸ்பெஷல் தான். ஏகப்பட்ட சிக்கன் ரெசிபிகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையில் அட்டகாசமாக இருக்கும். இன்று நாம் பார்க்க இருக்கும் சிக்கன் ரெசிபி ஸ்பைசி சிக்கன் ரோஸ்ட்.

தேவையான பொருட்கள்:
எலும்பு இல்லாத சிக்கன்- 1/2 கிலோ
இஞ்சி பூண்டு விழுது- ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள்- 3 தேக்கரண்டி
தனியா தூள்- ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள்- ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள்- ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா- 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய்- 3
கறிவேப்பிலை- ஒரு கொத்து
உப்பு- தேவையான அளவு
நெய்- 3 தேக்கரண்டி

செய்முறை:
*ஸ்பைசி சிக்கன் ரோஸ்ட் செய்வதற்கு முதலில் சுத்தம் செய்து நறுக்கிய சிக்கன் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.

*அதில் 2 தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது மற்றும் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து கலக்கவும்.

*இதனை முப்பது நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும்.

*முப்பது நிமிடங்கள் கழித்து ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி ஊற வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறவும்.

*இதனை ஐந்து நிமிடங்கள் வேக விடவும்.

*பின்னர் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி தனியா தூள், ஒரு தேக்கரண்டி மிளகுத் தூள், ஒரு தேக்கரண்டி சீரகத் தூள், 1/2 தேக்கரண்டி கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து கலந்து விடவும்.

*உங்களுக்கு தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கொள்ளலாம்.

*மிதமான தீயில் பதினைந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.

*இப்போது மேலும் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி நீளவாக்கில் அரிந்த பச்சை மிளகாய் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம்.

*அவ்வளவு தான்… சுவையான ஸ்பைசி சிக்கன் ரோஸ்ட் தயார்.

Views: - 160

0

0