ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ரெசிபி: மொறு மொறு வெஜிடபிள் போண்டா…!!!

Author: Hemalatha Ramkumar
5 October 2021, 12:57 pm
Quick Share

மாலை நேரத்தில் டீ உடன் சேர்த்து சாப்பிட சுட சுட மொறு மொறுவென்று ஏதேனும் தின்பண்டம் இருந்தால் யார் தான் வேண்டாம் என்பார்கள். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது ஒரு அசத்தலான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெசிபி. இப்போது வெஜிடபிள் போண்டா எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:
எண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- 1/4 தேக்கரண்டி
சீரகம்- 1/2 தேக்கரண்டி
பெருங்காயத் தூள்- ஒரு சிட்டிகை
வெங்காயம்- 1
பச்சை மிளகாய்- 1
இஞ்சி- ஒரு துண்டு
கறிவேப்பிலை- ஒரு கொத்து
கேரட்- 1
பீன்ஸ்- 5
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள்-1/2 தேக்கரண்டி
வேக வைத்த உருளைக்கிழங்கு- 5
வேக வைத்த பச்சை பட்டாணி- 1/2 கப்
எலுமிச்சை சாறு-1/2 பழம்
கொத்தமல்லி தழை- சிறிதளவு

போண்டா மாவு செய்ய:-
கடலை மாவு- 1/2 கப்
அரிசி மாவு- 1 1/2 தேக்கரண்டி
உப்பு-1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள்- 1/4 தேக்கரண்டி

செய்முறை:
வெஜிடபிள் ஸ்டஃபிங் செய்ய:-
*முதலில் உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணியை வேக வைத்து எடுக்கவும்.

*வேக வைத்த உருளைக்கிழங்கை தோலுரித்து மசித்து கொள்ளவும்.

*ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்.

*எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு போட்டு, கடுகு பொரிந்தவுடன் சீரகம், நறுக்கிய வெங்காயம்,இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

*வெங்காயம் வதங்கியதும் அதில் நறுக்கிய கேரட், உப்பு மற்றும் பீன்ஸ் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேக விடவும்.

*கேரட் மற்றும் பீன்ஸ் வெந்த பிறகு மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.

*இப்போது வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து கலக்கவும்.

*கடைசியில் எலுமிச்சை சாறு மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம்.

போண்டா மாவு தயாரிக்க:-
*மாவு தயாரிக்க கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.

போண்டா செய்ய:-
*வெஜிடபிள் கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மாவு கலவையில் முக்கி எண்ணெயில் போட்டு எடுத்தால் மொறு மொறு வெஜிடபிள் போண்டா தயார்.

*சூடான டீயுடன் இந்த மொறு மொறு வெஜிடபிள் போண்டாவை பரிமாறவும்.

Views: - 377

0

0