செம ஈசியான மற்றும் ருசியான முட்டை ஃப்ரைடு ரைஸ் ரெசிபி!!!

Author: Hemalatha Ramkumar
6 October 2021, 11:24 am
Quick Share

தற்போது உள்ள பெரும்பாலான குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு ஃப்ரைடு ரைஸ். ஆனால் இதனை கடைகளில் வாங்கி சாப்பிடுவது நல்லது அல்ல. எனவே ஆரோக்கியமான முறையில் வீட்டிலே டேஸ்டான முட்டை ஃப்ரைடு ரைஸ் எப்படி செய்வது என இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
முட்டை- 3
வெங்காயம்- 3
பூண்டு- 4 பல்
இஞ்சி- ஒரு துண்டு
எண்ணெய்- தேவையான அளவு
வெங்காயத்தாள்- ஒரு கொத்து
மிளகுத்தூள்- 1 தேக்கரண்டி
குடை மிளகாய்- 1
உப்பு- தேவையான அளவு

செய்முறை:
*முட்டை ஃப்ரைடு ரைஸ் செய்வதற்கு முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்.

*எண்ணெய் காய்ந்ததும் அதில் வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் குடை மிளகாய் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.

*அடுத்து நறுக்கிய வெங்காய தாள் சேர்த்து மேலும் வதக்கவும்.

*பின்னர் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கிளறவும்.

*வதக்கிய இந்த கலவையில் வடித்து ஆற வைத்த சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும்.

*இந்த நேரத்தில் ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து அடித்து வைக்கவும்.

*இப்போது வேறொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி முட்டை கலவையை அதில் போட்டு கிளறவும்.

*முட்டை பாதி மட்டும் வெந்ததும் இதனை சாதத்துடன் சேர்த்து கிளறி இறக்கினால் செம டேஸ்டான முட்டை ஃப்ரைடு ரைஸ் தயார்.

Views: - 392

0

0