தக்காளி இல்லாமல் செம டேஸ்ட்டான முட்டை கிரேவி ரெசிபி!!!

Author: Hemalatha Ramkumar
23 November 2021, 4:28 pm
Quick Share

தற்போது தக்காளி விற்கும் விலையைப் பார்த்தால் தக்காளி சாப்பிட வேண்டும் என்ற ஆசையே போய்விடும் போல உள்ளது. ஆனால் தக்காளி இருந்தால் தான் குழம்பு ருசியாக இருக்கும் என்றெல்லாம் கிடையாது. தக்காளி இல்லாமலே அதற்கு மாற்று பொருட்களைப் பயன்படுத்தி சுவையான சமையலை செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது செம டேஸ்டான தக்காளி இல்லா முட்டை கிரேவி.

தேவையான பொருட்கள்:
வெங்காயம்- 2
தயிர்- 1 1/2 கப்
வேக வைத்த முட்டை- 5
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி
மல்லி தூள்- 1 தேக்கரண்டி
சீரகத் தூள்- 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது- ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை- ஒரு கொத்து
கொத்தமல்லி தழை- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- 3 தேக்கரண்டி

செய்முறை:
*முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விடவும்.

*இதில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1/2 தேக்கரண்டி வெங்காயம் மற்றும் 1/2 தேக்கரண்டி உப்பு சேர்த்து கிளறவும்.

*இப்போது ஐந்து வேக வைத்த முட்டை போட்டு பிரட்டவும்.

*,இரண்டு நிமிடங்களுக்கு ரோஸ்ட் செய்து பின்னர் தனியாக எடுத்து வைக்கவும்.

*இப்போது அதே கடாயில் மேலும் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.

*அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

*வெங்காயம் வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

*இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போன பின் அதில் மிளகாய் தூள், மல்லி தூள், சீரகத் தூள் மற்றும் குழம்பிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.

*இந்த சமயத்தில் 1 1/2 கப் தயிர் சேர்த்து கொள்ளவும்.

*மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி குழம்பை மூடி போட்டு பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.

*குழம்பு கொதித்தவுடன் நாம் வறுத்து வைத்த முட்டையை சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் மூடி போட்டு கொதிக்க விடவும்.

*கடைசியில் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

Views: - 216

0

0

Leave a Reply