சுட சுட வெள்ளை சாதத்தில் இந்த எள்ளு துவையல் போட்டு சாப்பிட்டு பாருங்க…!!!

Author: Hemalatha Ramkumar
25 September 2021, 12:27 pm
Quick Share

பலருக்கு துவையல் என்றாலே பிடிக்காது. ஆனால் அதனை செய்யும் விதமாக செய்தால் கண்டிப்பாக உங்களுக்கே அது மிச்சம் இருக்காது. அந்த வகையில் ரசம் சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றிற்கு அசத்தலான காம்பினேஷனான எள்ளு துவையல் எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
எள்ளு- 2 தேக்கரண்டி
வர மிளகாய்- 8
பூண்டு பல்- 1
புளி- சிறிய நெல்லிக்காய் அளவு
தேங்காய் துருவல்- 1 கைப்பிடி
உப்பு- தேவையான அளவு
கடுகு- 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி

செய்முறை:
*வெள்ளை எள்ளு அல்லது கருப்பு எள்ளு எதுவாக இருந்தாலும் அதில் இரண்டு தேக்கரண்டி எடுத்து கொள்ளுங்கள்.

*ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எள்ளு போட்டு நன்கு வறுக்கவும்.

*எள்ளு கருகி விட கூடாது.

*எள்ளு வறுப்பட்டவுடன் அதனை ஒரு தட்டில் போட்டு ஆற வைத்து கொள்ளவும்.

*இப்போது ஒரு மிக்ஸி ஜாரை அடுப்பில் வைத்து அதில் வறுத்த எள்ளு, வர மிளகாய், பூண்டு, புளி ஆகியவற்றை சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும்.

*அடுத்து இதனோடு தேவையான அளவு உப்பு, தேங்காய் துருவல் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் கொர கொரப்பாகவே அரைக்கவும்.

*அவ்வளவு தான்… டேஸ்டான எள்ளு துவையல் தயார்.

*இதை அப்படியே சாப்பிடலாம். தேவைப்பட்டால் இதற்கு தாளிப்பு கொடுக்க கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டலாம்.

Views: - 294

0

0