தினமும் தூங்கும் முன்பு இந்த பாலை குடித்து வந்தால் ஆரோக்கியமாகவும் இருக்கலாம் அழகாகவும் ஜொலிக்கலாம்!!!

Author: Hemalatha Ramkumar
7 August 2022, 6:39 pm

நாம் ஆரோக்கியமான உணவுகளை உண்டு வந்தால் தான் நாம் நோய் நொடி இல்லாமல் இருக்கலாம். இது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் நாம் அறியாத ஒரு விஷயமும் உள்ளது. சத்தான உணவுகளை உண்டு வந்தால் தான் அழகாகவும் இருக்க முடியும். ஆம், உண்மை தான். நமக்கு அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைத்தால் நமது சருமம் பொலிவாக இருக்கும். அதோடு வயதான அறிகுறிகளையும் தவிர்க்க முடியும். அந்த வகையில் நீங்கள் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்க உதவும் ஒரு புரோட்டீன் பானம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
முந்திரி பருப்பு- 5
பாதாம் பருப்பு- 5
வால்நட்- 2
சப்ஜா விதைகள்- 1/2 தேக்கரண்டி
பேரீச்சம் பழம்- 2
பால்- ஒரு டம்ளர்

செய்முறை:
*முதலில் 1/2 டம்ளர் சூடான நீரில் சப்ஜா விதைகளை ஊற வைக்கவும்.

*ஒரு கிண்ணத்தில் பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, வால்நட், கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் ஆகியவற்றை 1/4 டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ஊற வைக்கவும்.

*பத்து நிமிடங்கள் கழித்து இந்த பாலோடு சேர்த்து இதனை மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

*அரைத்த இந்த கலவையோடு சூடான 1/2 டம்ளர் பாலை சேர்த்து சப்ஜா விதைகள் கலந்து பருகலாம்.

*இது மிகவும் சத்தான ஒரு புரோட்டீன் பானம். இது உங்களை ஆரோக்கியமாக வைப்பதோடு, அழகாகவும் பார்த்து கொள்ளும்.

*நீங்கள் விருப்பப்பட்டால் இதனை குளிர்ச்சியாகவும் பருகலாம்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!